பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 10 –

ஏழு பாருலகொ டேழிசைவ ளர்க்க வுரியாள்
யானை மீதுபிரி யாதுடனி ருந்து வரவே."

என்ற கலிங்கத்துப் பரணிச் செய்யுளால் நன்கு அறியலாம். ஒரு அரசனுக்கு மகப்பேறு இல்லாவிட்டால் யானையைத் துகிலால் கண்கட்டிவிட்டு அதன் பிடரியின் மேல் ஏற்றிக்கொண்டு வருபவன், அவ்வரசனுக்குப் , பின்னர்ப் பட்டம் சூடும் பழக்கம், பண்டு நம் பைந்தமிழ் நாட்டில் இருந்துவந்ததென்பதைப் பின்வரும் பெரிய புராணச் செய்யுள் இனிது எடுத்துக்காட்டும்.

"கண்கட்டி விடுங்களி யானையைக் காவன் முதுார்
மண்கொட்புற வீதி மருங்கு திரிந்து போகித்
திண்பொற்றட மாமதில் சூழ்திரு வாலவாயின்
விண்பிற்பட வோங்கிய கோபுர முன்பு மேவி,"

துணை அன்பிற்கு எடுத்துக்காட்டாக யானையைப் பல புலவர்கள் பாடியுள்ளனர். மேலும் இது தன் இனத்தை நன்கு ஒம்பி உணவூட்டும் பெற்றியது. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிச் செல்லும் யானை "ஏந்தல் ” என்றும் "யூதநாதன்" என்றும் சொல்லப்படும். சங்க இலக்கியங்களில் பின்வரும் காட்சிகளைக் காணலாம். களிறும் பிடியும் ஒன்றைேடு ஒன்று இணைந்து அன்புபூண்டு ஒழுகுகின்றன. களிறு தன் மடப்பிடியினைத் தழுவிக்கொண்டு குன்றகச் சிறு குடியிற் சென்று பின்னர் மகிழ்ச்சியை ஊட்டும் மாலை நேரத்தில் அப்பிடியோடு மலை முழைஞ்சுகளிற் புகுந்துசெல்ல அங்கு புலியொன்று எதிர்ப்படுகின்றது. ஆனால் களிறு புலியினை விரட்டிப் பிடியினது பயத்தை தெளிவிக்கின்றது. இவ்வாறு களிற்றிற்கும் பிடிக்கும் இடையே உள்ள அன்பினை விளக்கும் காட்சிகள் பலவற்றைத் தமிழ்ப் பாக்களில் காணலாம். மேலும்