பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
– 35 —

தவறாது ஆடும் காட்சியும், வானிலிருந்து இழியும் காட்சியும் கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

அழகு மிக்கதும் 'பள பள' என ஐவகை வண்ணமும் கொண்டதுமாகிய மயிலினைக் குறித்துப் பேசாத நூல் தமிழ் மொழியில் இல்லையென்றே கூறலாம். மயிலினை மகளிரது மென்மைக்கும், அதன் கலாவத்தை மகளிரது கூந்தலுக்கும் அதன் குடுமியை வாகைப் பூவிற்கும், அதன் காலை நொச்சி இலக்கும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். ஆண் மயிலே தோகையுடன் காண்டோர் கருத்தைக் கவரும் வகையில் விளங்கும். பெண் மயிலுக்குத் தோகை கிடையாது. ஆணுடன் பெடை இருந்தால் ஆண் மன எழுச்சியோடு ஆரவாரித்து எழிலுற விளங்கும். நம் புலவர் பெருமக்கள் மகப்பேறு பெற்ற மங்கையரைக் குறித்து எழுதும் போதெல்லாம் மயிலையே உவமங் காட்டிக் கூறுதல் மரபாகும். இதனது அழகை 'அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ ? எனக் குறள் வியந்து பாராட்டுகின்றது.

மயில் ஒருவகையில் தமிழ்நாட்டு மக்களுக்குப் பருவம் உணர்த்தும் பட்டியாக உதவிபுரிந்தது என்று கூறலாம். காதலர்க்குக் களிப்பூட்டும் கார்காலத்தினை மக்கள் மஞ்ஞை ஆடுவதைக் கொண்டே அறிந்து அக மகிழ்ந்தனர். ஏனெனில் கார்காலத்தில்தான் மயிலானது ஆரவாரித்துக் கருமேகத்தினக் கண்டு களிப்புற்றுக் கான் யாற்றங் கரையில் கண்டோரைக் கவரும் வகையில் ஆடும். முகிலினைக் கண்டவிடத்து மஞ்ஞை களிப்பில்லை ஆடி மழை வருவதை முன்னதாகவே மக்களுக்கு அறிவிக்கும். கவினுறு கழனிகளில் திரியும் மயில்கள் உழவரது முழ வொலியை முகில் முழக்கமெனத் தவறாகக் கொண்டு களிப்பின் மிகுதியால் ஆடும் என ஐங்குறுநூறு கூறுகின்றது.