பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
— 42 —

தும் பேசப்படுகின்றது. மரங்களில் கூடுகட்டி வாழும் இக்காக்கை பெரும்பாலும் நம் இல்லங்களைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கும். தின்பண்டங்களை நம்மிடமிருந்து திருடி உண்ணுவதில் காக்கையை எப்பறவையும் மிஞ்ச முடியாது. காக்கையிடம் காணும் சிறந்த பண்பாடு அது தன் இனத்தோடு கூடி உண்ணுதலாகும். அண்டங் காக்கை, சிறு கருங்காக்கை என இது இரண்டு வகைப்படும், பின்னதே இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகின்றது. இக்காக்கையானது அகப்பொருட் காதலிக்கு நிமித்தம் பார்த்தலாக இலக்கியங்கள் எடுத்தோதுகின்றன. கழுத்திற் சிறிது வெண்மையுள்ள காக்கை சிறு வெண் காக்கை எனக் கூறப்படுகின்றது. உள்வாய் சிவந்திருக்கும் இது கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவர் என்று மக்கள் நம்பினர். இன்றையக் கொள்கையும் அதுவே. காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்பதனை 'விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே' என்ற குறுங்தொகை வரி நன்கு வலியுறுத்தும். மேலும் இதன் மூலம் மகளிர் சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுதல் வழக்கம் என்பதனையும் அறிய முடிகின்றது.

மக்களின் மணிப் பொறி (clock)

பண்டைத் தமிழ் நாட்டில் காலம் காட்டும் கருவியாக ஓரளவிற்குச் சில பறவைகள் விளங்கின எனக் கூறலாம். காலைக் கருவியாகச் சேவலும், கோழியும் சங்க இலக்கியத்தில் சாற்றப்படுகின்றன. இவ்வுண்மையினைப் பின் வரும் வரிகள் எளிதிற் புலப்படுத்தும்.

'வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனர் காப்போ ருணர்த்திய கூஉம்'
'குக்கூ வென்றது கோழி'