பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கோயிலின் மதில்மேல் கருடன் இல்லாமல் சிங்கம் இருப்பதை நினைவூட்டினார். உடனே திரு பழநிபிள்ளை, "இதோ பாருங்கள்! வைணவராகிய இவரே சிங்கம் உள்ளது என்று கூறுகிறார்-என்று சுட்டிக்காட்டினார்.

வேங்கட வேலவன்

பிறகு நான் ஒரு சான்று கூறினேன். அஃதாவது:- ஆனந்தா எம்போரியம் புரவலர் திரு. ந. கோவிந்தசாமி கந்தர் சட்டி நாளன்று, புதுவை-காமராசர் நகரில் ஒரு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறிய ஒரு செய்தியாவது:-புதுவைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரின் பெயர் வேங்கட சுப்பிரமணியன் என்பது. இந்தப் பெயரைக் கொண்டு, திருப்பதி மலைக் கோயில் முன்னொரு காலத்தில் முருகன் கோயிலாயிருந்தது என அறியலாம்-என்பது அந்தச் செய்தி. இந்தச் செய்தி எனக்கு நினைவு வந்தது. பல்லாண்டுகட்கு முன்பே நான் அறிந்த செய்திதான் இது இந்தத் துணைவேந்தர் சென்னையில் பணியாற்றிய போது "வேங்கட வேலவன்" என்று சிலர் இவரைக் குறிப்பிடுவது வழக்கம். இங்கே நானும் இந்தப் பெயரைக் குறிப்பிட்டு வேங்கடத்தில் சுப்பிரமணியர் கோயில் (முருகன் கோயில்) இருந்தது என்பதை இதனாலும் அறியலாம் என்று கூறினேன்.

கொடுமை

இதைக் கேட்ட கோயாலய்யர், இதற்கு நேர்ப் பதில் கூறாமல், சப்பிரமணியம் என்பது ஏதோ பிரகாசத்தைக் குறிப்பதாக, எல்லாக் கடவுளர்க்கும் பொருந்துவதான ஒரு பொருள் கூறி, வேங்கட சுப்பிரமணியன் என்பது முருகனைத்தான் குறிக்கும் என்று சொல்ல முடியாது என்று கூறினார். இஃது என்ன மேதைமை-இல்லை