பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

யில்லை. என்ன கொடுமை! இசுலாமியர் வணங்கும் "அல்லா" என்னும் தெய்வப் பெயர்க்கும் எல்லாக் கடவுளர்க்கும் பொருந்துமாறு பொருள் சொல்ல முடியுமே! திரு, கோபாலர் இதோடு விட்டாரா என்ன !

கொடுமையிலும் கொடுமை

திருப்பதி மலையில் முருகன் இருப்பதாகத் திருப்புகழில் அருணகிரி நாதர் பாடியுள்ளார் என்று திரு. பழநி பிள்ளை கூறினார். அதற்கு அய்யர், திருப்பதி என்பது வேங்கடத்தைக் குறிக்கவில்லை; திருப்பதி என்றால் அழகிய ஊர் என்று பொருளாகும் என்பதாக ஏதோ சொன்னார். திருப்பதி வேறு-திருமலை வேறு என்றும் எங்கட்குப் புதிதாகக் கற்றுத் தந்தார். இது கொடுமையிலும் கொடுமை! தலைமைப் புலவர் அல்லவா அவர்? அருணகிரியார் திருப்புகழில் "வேங்கட மாமலை" என்றே வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்

தலமைத் தருக்கு

முருகனுக்கு அரோகரா என்று கூறிக்கொண்டே மக்கள் காவடி சுமந்து ஆடியதை யான் குறிப்பிட்ட போது, அய்யர் அதற்கு நேர்ப்பதில் கூறாமல், காவடி என்பதைக் கா அடி என்று ஏதோ பிரித்து ஏதோ அறுவை மருத்துவம் பண்ணி என் பேச்சுக்கு இடையீடு செய்து கொண்டேயிருந்தார். திரு. சித்தன் குறுக்கிடுவதை எப்போதே நிறுத்திக் கொண்டார். ஆனால், கோபாலர் மட்டும், என் பேச்சின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையும் இடைமறித்து ஏதாவது சொல்லிக் கொண்டேயிருந்தார். மற்றவர்கள் அமைதியாயிருக்கக் கோபாலய்யர் மட்டும் குறுக்கிட்டார் என்றால், அவர் தலைமைப் புலவர் அல்லவா? அந்தச் சங்கத்தில் எவரை-