பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

யும் மீற விடுவாரா என்ன! என்னிடம் யாரும் இதுபோல் குறுக்கிட்டது-இடைமறித்தது கிடையாது.

இராமாநுசரின் திருவிளையாடல்

இந்த நிகழ்ச்சி நடந்தபின்னர் ஒருநாள் யான் உயர்திரு. கோவிந்தப் பத்தர் அவர்கவைக் கண்ட போது, அவர்கள் முன்பு கூறியது போலவே கூறினார்கள். மற்றும் வைணவப் பெரியாராகிய உயர்திரு பாண்டுரங்கன் அவர்களும் மூன்போலவே சிங்கம் இருப்பதைக் குறிப்பிட்டு, மேலும் இரண்டு செய்திகள் தெரிவித்தார்கள். ஒன்று:- திருப்பதி மலைக் கோயிலில் மார்கழி மாதத்தில் வில்வம் கொடுக்கப்படுகிறது என்று கூறினார்கள். வில்வம் சைவத்திற்கு உரியதாகக் கொள்வது மரபு. இரண்டு:-வைணவத் தலைவராகிய இராமாநுசர் பாம்பு வடிவம் எடுத்து, தெய்வத் திருமேனியின் முழுக்கு நீர் வெளிவரும் கால் வழியாகக் கருவறைக்குள்ளே நுழைந்து, தெய்வத் திருமேனியில் சங்கையும் சக்கரத்தையும் பதித்து வந்து விட்டார் என்றும் கூறினார். இச்செய்திகள் சங்கப் பொருளாளராகிய பாண்டுரங்கனார் சங்கக் கட்டடத்திலேயே என்னிடம் தெரிவித்தவையாகும்.

பிறகு நான் வெளியில், வெளியூர்களில் யாரிடம் கேட்டாலும், "ஆமாம், முருகன்தான் பெருமாளாக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. நெற்றி முழுவதும் நாமம் இட்டிருப்பது, வேறு எந்தக் குறியையோ மறைப்பதற்குத் தானாம் என்று கூறுகின்றனர். மற்றும் ஒரு வைணவ அறிஞர் கூறியன வருமாறு:-

புதுச்சேரியில் திரு. காந்தாளன் என்னும் வைணவப் பெரியார் ஒருவர் உள்ளார். அவர் தமிழ் அறிஞர்- தமிழ் ஆசிரியர்-நேர்மையானவர்-கண்டிப்பானவர்- அஞ்சாநெஞ்சுறுதி படைத்தவர் - என் அரிய பெரிய