பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

திருவூறல் - உமாபதீசுரர். வெண்காடு - சுவேதாரணியேசுரர். வென்ணெய் நல்லூரி - கிருபா புரீசுவரர். வெண்பாக்கம் - ஊன்றீசர். எதிர் கொள்பாடி - ஐராவதேசுவரர். எருக்கத்தம் புலியூர் - நீலகண்டேசுரர். வேட்தளம் - பாசுபதேசுரர். ஏடகம் - ஏடகநாதேசுரர். வேதிகுடி - வேத புரீசர் வேற்காடு - வேத புரீசர். ஒற்றியூர் - ஆதிபுரீசுவரர். ஓண காந்தன்தளி - ஓண காந்தேசுவரர். திருவோத்தூர் - வேத நாதேசுவரர், வில்லியனூர் - திருக்காமேசுரர். புதுச்சேரி - வேத புரீசுவரர் - காளத்தீசுவரர்,

இவ்வாறு இன்னும் பற் பல பெயர்கள் உண்டு, ஈசுவரன் கோயில் ஆனதால் சசர் - ஈசுவரர் என்னும் ஈற்றில் பெயர்கள் முடிந்துள்ளன என எளிதாய் எண்ணிவிட முடியாது. ஈசன் - ஈசுவரர் என்னும் ஈறுகளில் முடியாத பல பெயர்கள் சைவத்தில் உண்டு. விரிப்பிற் பெருகும். இதே முறையில் தான் வேங்கடேசன், வேங்கடேசுவரர் என்னும் பெயர்களையும் சைவப் பெயர்களாகக் கொள்ளவேண்டும் என்பது ஒரு கருத்து. எங்கேனும் வேறு இடத்தில் ஈசர் அல்லது ஈசுவரர் என்னும் ஈற்றில் முடியும் வைணவப் பெயர் இருப்பினும், சைவப் பெயர்களின் பெரும்பான்மை நோக்கி, வேங்கடேசரை சைவப் பெயராகக் கொள்வதே பொருத்த முடையதாகும். ஏனெனில், பலராலும் பல விதமாகப் பேசப்படும் சிக்கல் நிறைந்த இடம் வேங்கடம் ஆதலின் என்க. சசன் என்னும் பெயர் சிவனுக்கு இருப்பதன்றி, சைவ சார்புடைய பிள்ளையாருக்கும் முருகனுக்குங் கூட உண்டு. கணேசர், விக்னேசுவரர் என்பன பிள்ளையாரின் பெயர்கள். முருகேசன் குமரேசன் என்பன முருகன் பெயர்கள். இந்த அடிப்படையில் வேங்கடேசன் என்ற பெயரையும் பொருத்திப் பார்க்கலாம். இதற்கு நடுவு நிலைமை உணர்வு வேண்டும். சமயப்பித்தின்றி நோக்க வேண்டும்."