பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23



இலக்கியச் சான்றுகள்

திருப்பதி-திருமலைக் கோயில், முன்பு ஒரு காலத்தில் முருகன் கோயிலாய் இருந்தது என்பதற்கு மேற்கூறிக ஆதாரங்களே போதும். மேற்கொண்டு இலக்கிய ஆதாரம் வேண்டும் என்றதனால், அந்த ஆதாரத்தையும் பிற் காலத்திலிருந்து முற்காலத்தை நோக்கிப் படிப்படி யாக முன்னேறிக் காண்போம்:-

இலக்கிய ஆதாரம் எனில், வைணவ இலக்கியங்கள் மிகப் பல உள்ளனவற்றை இங்கே எண்ணலாகாது. பல நூற்றாண்டுகளாகத் திருமால் கோயிலாக இருந்து வருவதனாலே, ஏராளமான வைணவ நூல்கள், திருப்பதி-திருமலைத் தெய்வத்தைத் திருமாலாகப் போற்றியுள்ளன. இங்கே இந்தக் கருத்துக்கு இடம் இன்று. இது முருகன் கோயிலாய் முன்னர் இருந்தது என்பற்கு உரிய இலக்கிய ஆதாரங்களே இங்கே ஆராயப்படும்.

நச்சினார்க்கினியர் கருத்து

தொல்காப்பிய நூலின் தொடக்கத்தில், தொல் காப்பியரின் சிறப்பு பற்றிப் பனம் பாரனார் என்பவர் இயற்றிய சிறப்புப் பாயிரப் பாடல் ஒன்றுள்ளது. அப் பாடலின் தொடக்கம்,

"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் கல்லுலகத்து"

என்று உள்ளது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், வடவேங்கடம் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்:- "நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடு பெற்ற மலையாதலானும்