பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

இற்றைக்கு இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு. முன்னே தொல்காப்பியம் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நூலின் தொடக்கத்தில், பனம்பாரனார். என்பவரால் இயற்றப் பெற்ற "வடவேங்கடம் தென் குமரி" என்று தொடங்கும் சிறப்புப் பாயிரப் பாடல் ஒன்று அமைந்துள்ளது என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது.

இந்தப் பனம்பாரனார், தொல்காப்பியரைப் போலவே அகத்தியரின் மாணாக்கர் என்றும், தொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒரு சாலை மாணாக்கர்கள் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். குறுந்தொகையில் உள்ள 52ஆம் பாடலை எழுதியவர் பனம்பாரனார் என்பவர் என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது). தொல்காப்பியப் பாயிரப் பனம்பாரனாரினும் குறுந் தொகைப் பனம்பாரனார் வேறானவர். இருவரும் ஒருவரே என்று எவரேனும் கூறினும், குறுந்தொகை 52ஆம் பாடலை எழுதியவர் மிகவும் பழங்காலத்தவரே.

இங்கே நமக்கு வேண்டிய கருத்தாவது:- பனம்பாரனாருக்கு வடவேங்கடம் தெரிந்திருக்கும் போது, தொல்காப்பியருக்கும் வடவேங்கடம் தெரிந்திருக்கும். அப்போது வேங்கட மலையில் திருமால் கோயில் இருந் திருப்பின், 'முருகனது இருப்பிடம் மலைப் பகுதிகள்–என்னும் பொருள் உடைய 'சேயோன் மேய மை வரை உலகம்’ என்னும் அடியைத் தம் தொல்காப்பித்தில் எழுதியிருக்க மாட்டார். சேயோன் என்றால் முருகன் வரை என்றால் மலை. எனவே, வேங்கடமலையும் முருகனுக்கு உரியது என்பதற்குத் தொல்காப்பியச் சான்று ஒன்றே போதும். தொல்காப்பியம் இலக்கண நூல்தான். இலக்கியம் கண்டதற்குத்தானே இலக்கணம் உள்ளது. ஊரில் உள்ள–நாட்டில் உள்ள அமைப்பு