பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

இப்போது கண்ணன், பலராமன் முதலியோர் சிலைகள் உள்ளனவே – இந்த இடத்தில் முன்பு சீநிவாசப் பெருமாளின் சிலை இருந்திருக்கலாம்; இடப்பக்கத்துக் கருவறையில் இப்போதும் பெண் தெய்வச்சிலை உள்ளது. திருமலை முருகனைத் திருமால் ஆக்கி விட்டதால் பெண் தெய்வக் கோயில் அங்கே இல்லாத குறையை நீக்கக் கீழே உள்ள அலர்மேல் மங்கையை மலைப் பெருமாளின் மனைவியாக்கிவிட்டு, பக்கத்து நடுக்கருவறையில் இருந்த சீநிவாசப் பெருமாளை அதன் பக்கத்துக் கருவறைக்குள் தள்ளி, அவர் இடத்தில் கண்ணன் - பலராமன் குழுவை அமைத்து விட்டதாக எண்ணலாம் போல் தோன்று கிறது. இது உறுதியான கருத்து அன்று சீநிவாசப் பெருமாளின் கருவறைக்கும் பெண் தெய்வக் கருவறைக்கும் இடையே - கோபுர வாயிலுக்கு நேரே உள்ள நடுமையைக் கருவறையில் கண்ணன் - பலராமன் இருக்கிற நிலைமை இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது. எண்ணம் தவறாயின் யாரேனும் இந்நிலைமை பற்றி விளக்கம் தரலாம். மற்றும், யான் சென்று கண்டபோது, கண்ணன் - பலராமன் கருவறையும் பெண் தெய்வக் கருவறையும் திறந்திருக்கப் படையல்களும் நடந்தன. அப்பொழுது சீநிவாசப் பெருமாளின் கருவறை மூடி யிருந்தது எனக்கு மனக்குறையாயிருந்தது. இவ்வனவோடு இது நிற்க.

திருவேங்கட புராணம்

யான், திருமலையில், "திருவேங்கட புராணம்-ஸ்ரீ வேங்கடேசர் வரலாறு - தல புராணம்"-என்று பெயரிட்டுள்ள ஒரு நூலை விலைக்கு வாங்கினேன். வீட்டிற்கு வந்ததும் படித்தேன் அறிவியலுக்குச் சிறிதும் பொருந்தாத ஊசிப்போன கருத்துகள் அந்நூலில் நிரம்பக் கூறப்-