பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பட்டுள்ளன. மற்றும், திருமலை சிலையில் இயற்கையாக வளையும் ஆழியும் (சங்கும் சக்கரமும்) இல்லாத குறையைச் சரி செய்ய இரண்டு செய்திகள் தரப்பட்டுள்ளன. அந்நூலில் உள்ளாங்கு அப்படியே அவை வருமாறு :

“பகவான் தொண்டைமானுக்குச்
சங்கு சக்கரம் அளித்தது”

“ஆனால் பகைவர்கள் பலராக இருந்ததால் போரில் தொண்டைமானுக்குத் தோல்வி ஏற்படும் போல் இருந்தது. ‘பகவானே, இது என்ன சோதனை ! உன்னை நம்பியவர் கைவிடப்பட்டதுண்டா?- என்று மனம் கலங்கிய தொண்டைமான், நாள்தோறும் பகவானனத் தரிசிக்கச் செல்வதற்காகத் தன் அரண்மனையிலிருந்து கோயில் வரை வெட்டிக் குடைந்து உண்டாக்கியிருந்த சுரங்கப் பாதை வழியாகக் கோயிலை அடைந்து பகவானுடைய பாதாரவிந்தங்களில் சரண் புகுந்தவனாக ’ஹே அனாத ரட்சகா! அடியேனை நீதான் காப்பாற்ற வேண்டும். உன் அடிமையாகிய எனக்குத் தோல்வி ஏற்பட்டால் அதனால் எனக்கு ஏற்படும் அவமானத்தை விட, உன்னை நம்பியவன் கைவிடப்பட்டான் என்ற பழிச் சொல் ஏற்படுமே என்பதற்காகத்தான் வருந்துகிறேன். கருணா சாகரப் பிரபோ! வழி காட்டு! காப்பாற்று’ என்று முறையிட்டவனாகக் கண்ணிர் உகுத்து நின்றான். உடனே பகவான் தன் கைகளிலிருந்த சங்கு சக்கரங்களைத் தொண்டைமானிடம் கொடுத்துப் போருக்குச் செல்லும்படிப் பணித்தார். சக்ராயுதம் பகைவர்களை வீழ்த்தியது. தொண்டைமான் வெற்றி பெற்றான்.