பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47



மணிமேகலை

சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும். இரட்டைக் காப்பியங்கள் எனல் மரபு, இவற்றின் ஆசிரியர்களாகிய இளங்கோவடிகளும் சாத்தனாரும் ஒரே காலத்தில் இருந்து ஒருவரை ஒருவர் நேரில் கண்டு உரை யாடிக் கொண்டவர்கள். எனவே, சாத்தனாரும் இளங்கோவடிகள் போலவே கற்பனை செய்துள்ளார். ஞாயிறும் திங்களும் போல் திருமால் ஆழியும் வளையும் வைத்திருப்பதாக இளங்கோ கூறியுள்ளார். சாத்தனாரோ காவிரிப்பூம்பட்டினம் (புகார்) என்னும் பெண், மாலையில் ஒரு பக்கம் வெண்தோடும் மற்றொரு பக்கம் பொன்தோடும் அணிந்திருந்தாற் போன்று, கீழ்பால் திங்களும் மேல் பால் ஞாயிறும் விளங்கின என்று கூறியுள்ளார். பாடல் பகுதி வருமாறு:

"புலவாை யிறந்த புகாரெனும் பூங்கொடி......
குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டோடு பொன்தோடாக—"

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய கதை).

என்பது பாடல் பகுதி. புகாரெனும் பூங்கொடி புகார் என்னும் பெண். குணதிசை = கிழக்கு. நாள் முதிர் மதியம் = முழுநிலா. குடதிசை = மேற்கு. வீழ் கதிர் = ஞாயிறு.

டென்னிசன்

இரு பக்கங்களிலும் ஒரே நேரத்தில் ஞாயிறும் திங்களும் தெரிவது பற்றிக் கூறுவது புலவர்கட்கு விருப்ய மான ஒன்றாகும். லார்டு டென்னிசன் (Lord Tennyson) இயற்றிய 'The Lotos Eaters” என்னும் ஆங்கிலப் பாட-