பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

லிலும் இந்தக் காட்சி குறிப்பிடப்பட்டுள்ளது. யூலிசெஸ் (Ulysses) என்னும் கிரேக்க மன்னனின் போர் மறவர்கள், 'ட்ராய்' (Troy) பகுதியை வென்று தம்முடைய 'இதாகா' (Ithaea) என்னும் பகுதிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த வழியில் ஒரு தீவில் தங்கினார்களாம். அவர்கள் அத்தீவில் மாலையில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடையே அமர்ந் திருந்தார்களாம். பாடல் பகுதி:—

“They sat them down upon the yellow sand,
Between The sun and moon upon the shore”—

என்பது பாடல் பகுதி (5:1, 2). எனவே, இளங்கோவடிகள், திருமாலுக்கு வளையும் ஆழியும் உண்டு என்னும் எண்ணத்தில் வேங்கட மலைத் திருமாலைப் பற்றிக் கற்பனை செய்துள்ளாரே தவிர, உண்மையில் அப்போழ்து வளையும் ஆழியும் இருந்திருக்கி வாய்ப்பில்லை. இருந்திருந்தால், பிற்காலத்தில் இராமாநுசர் இவ்வளவு பாடுபட்டிருக்க வேண்டியதில்லையே. இராமாநுசர் வேங்கடமலைக் கோயிலில் சில திருப்பணிகள் செய்துள்ளமை ஈண்டு இணைத்து நோக்கத்தக்கது.

குகை வழி

மற்றும் ஒன்று:—தொண்டைமான் என்னும் அரசன் வேங்கட மலைக் கோயிலைக் கட்டினானாம். அவன் மலையை வெட்டிக் குடைந்த சுரங்கப் பாதை வழியாகச் சென்று திருமாலை வழிபடுவானாம்-என முற்கூறிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகன் வேங்கட மலைக் குகை வழி வந்ததாகக் கந்தபுராணமும் கந்த புராண வெண்பா நூலும் அருணகிரியாரின் திருப் புகழும் கூறியுள்ள செய்தி ஈண்டு ஒப்பு நோக்கி எண்ணத் தக்கது.