89. எழுவர் தமிழர் என்றே உழவர் நாள் கொடி ஏற்றிடுவோம் ! மழவர் கிலம் காப்பதற்கு மார்தட்டிச் சூள் உரைத்திடுவோம் ! பொங்குக பால் என்று முழங்குகின்றார். பொங்கல் திருநாள் புதுமைத் திருநாள்-பொதுமைத் திருநாள்-இயற்கை மறுமலர்ச்சித் திருநாள் என்றெல்லாம் எண்ணும் கலைஞர் அவற்றிற்கெல்லாம் பொன் மெரு கூட்டும் தமிழின் பொருண்மையை மறவாமல் போற்று கிறார்; இதோ அவர் இதயம் : இன்பக் காவியத் திருநாளாம் பொங்கலன்று அவற்றைக் கூவிய குயில்கள் எல்லாம் மீண்டும் கூவ மக்கள் து.ாவிய மலர்மலைமேல் மாத்தமிழாள் நடந்துவரநம் மாநிலத்து மாந்தரெல்லாம் மா, பலா, வாழையெனும் முக்கனியின் சுவையி னுாடே தித்திப்புப் பொங்கல் தின்றிடவே வேண்டும். பொங்கல் திருநாளின் பொலிவுக்கெல்லாம் காரணம் கதிரோன் ! அவன் அருள் இல்லையேல் வாழ்வேது ? வையகம் ஏது ? இந்த உண்மையைக் கலைஞர் கருதும் போது அவருக்குக் கைவந்த கலையை-வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலக் கட்சி அரசியலைக் கலந்துவிடும் கலையைக் கைவிடுவாரா ? பாடுகிறார் : பொங்கல் நாளில் புதுப்புது இன்பம் எங்கணும் தோன்ற எழுந்தான் கதிரோன் ! எதையும் அன்பால் அணுகி வென்றிட உதய சூரியன் உயர்ந்தான் இன்று !
பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/101
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை