பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பாட்டாளியின் பெருமையையும்-பொங்கல் மாட்சி யையும்-கலைஞர் தீட்டும் பெற்றியை விளக்குவதுடன், வள்ளுவர் வழியில் கலைஞர்-அவரது அடி ஒற்றியும் நெறி தழுவியும் குறட்பாவை ஏற்ற விடத்து எடுத்தாளும் திறத்தை-வகை வகையாகத் தொகுத்தும்-தொடுத்தும் விளக்கம் செய்துள்ள பாங்கு ஒரு ஆய்வாக மட்டுமன்றிப் பயன்மிக்க கருத்து மலர்க் கொத்தாகவும் மணக்கின்றது. 'நெஞ்சுக்கு நீதி ஒரு கருத்தீடு-என்னும் ஆய்வுக் கட்டுரையும் ஒரு செஞ்சொற் கருவூலமேயாம். ஆம்-டாக்டர் கலைஞரை ஆய்வு செய்யத் தலைப் பட்ட டாக்டர் சஞ்சீவியின்-தமிழ் உள்ளத்தை, ஆய்வுத் திறத்தை, சான்றாண்மைப் பண்பை, தியாகம் போற்றும் சிந்தையை, தமிழர் நலன் நாடும் ஆர்வத்தை இந்தத் தொகுப்பு ஏடு-உலகுக்கு உணர்த்துகிறது. ஆம், சஞ்சீவி அவர்கள் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பாராயின்தமிழுக்கு எத்தனை பெரும் பயன் விளைந்திருக்கும் ? என்று எண்ணிடத் தோன்றும் இவ் வேளையில்-அவரது மனம் எவரது வாழ்வு நீடித்திட வேண்டும்-தமிழும் தமிழரும் வாழ்வு பெற என்று விழைந்தாரோ-வேண்டினாரோஅந்தப் பெருங்கலைஞர் மேலும் பல்லாண்டு வாழ்ந் திடட்டும்-என்று எண்ணுவதிலேயே மனதுக்கு ஒரு நிறைவு ஏற்படுகிறது. கலைஞரின் அருமையும் பெருமையும் பல கோணத்தில் விளக்கிடும் இந்நூல்-டாக்டர். சஞ்சீவின் பெருமைக்கும் பேரறிவுத் திறனுக்கும் ஒரு சான்றாக விளங்குகிறது. என்பேன், 器妙。等。及9 க. அன்பழகன்