பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$25 தங்தையோ வள்ளுவராம்! மாமேதை வள்ளுவரை மாமன் முறை கொண்டாட ஆமோ என்னால்?.......................... ... இப்பகுதி கலைஞரின் கற்பனை திருக்குறள் ஈடுபாடு காட்டும். கற்பனை நகைச்சுவை எல்லாம் சில நேரங்களில் கால் வழுக்கும் களங்கள். இப்பகுதியிலும் தாய்-தந்தை கற்பனை அதைக் காட்டக்கூடும். திருவள்ளுவருக்கும் தமிழ் தாரம் இல்லையே!-தாய்தானே !! (2) கலைஞரின் திருக்குறள் ஈடுபாட்டிற்குக் கலையாச் சான்றாய்-இமயக் குமரிச் சான்றாய் இலங்கும் இடம் ஒன்று கவியரங்கில் கலைஞர்: கவிதையில் உள்ளது. அது பலர் வாழ்வுக்காகத் தானொருவன் சாவதை விரும்பும் கல்லக்குடி', 'பாளையங்கோட்டை” வீரத்தைப் பகர்வ தாகும்: இறந்திடுவேன் எதிர்ப்பினிலே............ என் தலைவன் இருவிழியும் நீர்ப்பொழிய! அச்சாவை இரந்திடுவேன்..................... மறந்திடுமோ திருக்குறளும்? மறக்கவில்லை! (கவியரங்கில் கலைஞர், ப. 73) ஆம்! நம்மாலும் மறக்கமுடியாத மணி வரிகள் (1) திருக்குறளை நம்பாதவரை நகைக்கிறார் கலைஞர். அதன் நயன் நகைச்சுவைப் பகுதியில் நண்னு வோம். ஈண்டுத் திருக்குறளை நம்பாதவரைக் கலைஞர் பகைக்கும் பயன் இடம் ஒன்று பார்ப்போம். "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்' இதை மறுப்பார் கயவரிலே ஒருவகையாம் (கவியரங்கில் கலைஞர், ப. 79)