பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44? எனவே மாண்புமிகு நம் கலைஞர்-முதல்வரின் நற்பணி-வெள்ளி விழாப் பொற் பணி-தலைவர் ம.பொ.சி.-யின் வைர நெஞ்சின் வாழ்த்தையும் வணக்கத் தையும் பெறுதல் இயல்பே ஆகும். அந்த இயல்பு தந்த இலக்கியம் வருமாறு : தேச பக்தர் சிதம்பரனார். நாற்பது ஆண்டு -இரண்டு ஆயுள்-சிறைத் தண்டனை பெற்றார் என்பது நாடறிந்ததாகும். அந்த மா வீ ர ர் கொடுந்தண்டனை பெற்றதோடு, சிறைச்சாலை யிலே கொடுமை மிக்க வேலைகளிலும் அதிகாரி களால் ஈடுபடுத்தப்பட்டார். ஆம்; கல் உடைத்துக் கஷ்டப்பட்டார். பிற கி ரி மி ன ல் கைதிகளின் மலத்தைக்கூட எடுக்குமாறு வற்புறுத்தப்பட்டார். துரைபோல வாழ்ந்தவர், சிறையிலே தோட்டி போலப் பணி புரிய வற்புறுத்தப்பட்டார். இவற்றை விடவும் கொடுமை மிக்க செயல் என்ன வென்றால் மாடுபோலக் கருதிச் செக்கு வலிக்கச் செய்ததாகும். ஐயன் சிதம்பரனார் மெய் வருந்த இழுத்த செக்கானது அது நிகழ்ந்த அறுபது ஆண்டுக் காலம் கோவைச் சிறையிலே பாதுகாக்கப்பட்டு வந்தது. பின்னுள்ள இதற்கு யாரெல்லாம் காரணமானவர் களோ, அவர்களையெல்லாம் வாயார வாழ்த்து கிறேன். சிதம்பரனார் இழுத்த செக்கினைக் காணும் பொருட்டு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கோவைச் சிறைச்சாலைக்குச் சென்றேன். அப் பொழுது எங்கோ ஒர் மூலையில் அந்தச் செக்கு கிடத்தப்பட்டுக் கிடந்தது. அதனைப் பாதுகாத்து வைக்குமாறு சிறையதிகாரியை வேண்டிக் கொண் டேன். கோவைச் சிறையில் சிதம்பரனார் இழுத்த