பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i42 செக்கு இன்னமும் இருக்கிறதென்பதைத் தமிழக அரசும், தமிழின மக்களும் அறிந்து கொள்ளும் படிச் செய்தேன். ஆனால், அதன் பின்னரும் கோவையில் சிறை'ப்பட்டிருந்த செக்குக்கு விடுதலை கிடைக்கவில்லை. ஆம் : அன்றிருந்த தேச பக்தர்களின் ஆட்சி சிதம்பரனார் இழுத்த செக்கை நினைவுச் சின்னமாக்குவது பற்றிச் சிந்திக்கவேயில்லை. விடுதலை வெள்ளி விழா நாளிலே, நள்ளிரவில் கூடிய சட்ட மன்ற உறுப்பினர் கூட்டத்திலே, வ.உ. சிதம்பரனார் இழுத்த செக்கு அவரது நினைவுச் சின்னமாகக் கருதப்பட்டு, சென்னை நகரிலே சிறப்புமிக்க ஓரிடத்திலே வைக்கப்படும்’ என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித் தார். இந்தச் சிறப்புமிக்க செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடையாத தமிழர் இருக்க முடியாது. தேசபக்தர் சிதம்பரனார் இழுத்த செக்கை அவரது நினைவுச் சின்னமாகச் செய்வதற்குத் தி.மு.கழகம் அதிகாரத்திற்கு வரவேண்டியிருந்தது. ஆம் ; தேச பக்தியோடு தமிழினப் பற்றும் இருந்தால் தான் சிதம்பரனார் போன்ற தேசபக்தத் தமிழர் களைப் போற்றிப் பெருமைப்படுத்த முடியும் போலும் ! எப்படியோ சிதம்பரனார் இழுத்த செக்கு விடுதலை வெள்ளி விழா நாளிலே கோவைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். சிதம்பரனாரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் நேரத்திலே, த மி ழ க அரசிடமிருந்து இந்த அறிக்கை பிறந்திருப்பது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிதம்பரனாரின் புகழ் பரப்பப் பாடுபட்டு