பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதக் கட்டுரை 1. காஞ்சி' - பேரறிஞர் அண்ணா நினைவு மலரில் தங்கள் கவிதைகள் பற்றி ஓர் எளிய ஆராய்ச்சியாக வந்துள்ள எளியேன் கட்டுரையைப் பார்த்திருப்பீர்கள். எண்ணத்திலேனும் வாழ்த்த வேண்டுகிறேன். 2. காஞ்சி 30-3-1975-ஆம் நாள் இதழில் தங்களின் வானமே பொழிக நீ! என்னும் கவிதை வெளிவந்துள்ளது, எனக்கு என்னவோ தாங்கள் இதுவரை எழுதிய கவிதை களுள் இதுவே சிறந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது ஒருவேளை தாங்கள் எழுதும் ஒவ்வொரு புதுக் கவிதையும் இந்த உணர்வையே புகட்டும் போலும். என்றாலும், இந்தக் கவிதை எந்தக் கல் நெஞ்சையும் உருக்கி என்றென்றும் நின்று நிலவும் என்று எண்ணுகிறேன். மழையில்லாக் கொடுமைக்கு ஒரு மருந்து உண்டேல் - ஓர் ஆறுதல் உண்டேல் - அது தமிழ் நெஞ்சத்திற்கு இந்தக் கவிதையே தான் எனலாம். 2.1 வானமே பொழிக நீ! என்ற கவிதையைப் படித்த பின்பு இந்தக் கவிதையின் தலைப்பு தாங்கள் பொய்ப்பு இல்லா வானத்தை நோக்கிப் பாடியதுதான் என்றாலும் கவிதையைப் படித்த பின்பு தங்களை நோக்கிக் கோடான கோடித் தமிழ் மக்கள் பாடுதற்குரிய தலைப் பாகவும் அது அமைந்திருப்பதை நினைக்கும்பொழுது நெஞ்சம் நெகிழ்கிறது. தாங்கள், வானம் வற்றினும் வற்றாத வானம் தானே! 2.2 தாங்கள் வரைந்துள்ள இந்தப் புதிய கவிதையை எவ்வளவு உண்மையுடனும் உருக்கத்துடனும் எழுதியிருப்

  • காஞ்சி, 27.4-75-இதழில் வெளி வந்த கட்டுரை