பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 பீர்கள் என்று நினைக்கும் பொழுது தங்களுக்குள்ள தேவை யற்ற இடையூறுகளால் எல்லாம் உள்ளம் உடையாமல் - இடுக்கண்(ணால்) அழியாது - சான்றாண்மைப் பண்போடு மக்கள் நல்வாழ்க்குத் தங்கள் உயிர் துடிப்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய பண்பாளரைப் பார்க்கவே இந்தத் தமிழகம் இத்தனை நூற்றாண்டுகளும் தவம் செய்ததோ! 2.3 தங்கள் கவிதையில் சொற்கள் குறைவுதான், ஆனால் சுடர்விடும் உணர்வுகள் குறைவற்றவை; நிறை வானவையே. 2.3.1. வானமே பொழிக நீ! வறட்சியின் கெருப்புக் காட்டை-கீ வடித்திடும் கண்ணிரால் அனைத்துவிடு! என்னும் மூன்று வரிகளும் பாட்டின் முகப்பாய் முகமாய் அமைந்திருப்பது தங்கள் தமிழகத்தின் தனி நிலையை நனி விளக்குவதாகும். வானமே பொழிக நீ! என்னும் மூன்று சொற்களும் கோடான கோடி மக்களின் வேண்டுதலே யன்றி அவர்கள் கண்ணினும் உயிரினும் இனிய முதல்வரின் வேண்டுதலுமாகும். மூன்று சொற்களுள்ளும் வானமே" என்ற சொல் முதலாவதாக இருப்பது-ஏகார ஏக்கத்தோடு இருப்பது- எவ்வளவு பொருத்தம். அவ்வாறே பொழிக’ என்ற சொல் நடுநாயகமாக இருப்பதும் நீ என்ற முன்னிலைச் சொல் கடை(சி)யில் இருப்பதும் எவ்வளவு சரி; நடுநாயகமாக (இரு பொருள்களிலும்) எல்லோரும் வேண்டுவது பொழிதல்தானே! நீ பொழிக வானமே" என்று இல்லாமல் வானமே பொழிக நீ! என்று இருப் பதில்தான் எவ்வளவு (வி)வேகம் தானாகப் பொழியாத வானத்தை நேரடியாக விளித்தலும் நீ" என்ற ஏக வசனத் தில் சு(ட்)டுவதும் சொல்லின் செல்வர் கடமைதானே. 3223–10