பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$48 மணமும் குளிர்ச்சியும் மண்டிய நீர்; உண்மைதானே ! குளியல் இன்றி என்னருந் தமிழகம்தான்" என்று சேர்த்துப் படிக்கும்போது தமிழகத்தின் குளியல் பண்பாடே தனிப் பண்பாடு என்பதை மாநில சுயாட்சி கேட்கும் தங்கள் அடி மனம்-ஆழ்மனம் வெளிப்படுத்துகிறதே! பொதுவுடைமை பேசும் தாங்கள் என்னருந் தமிழகம்தான்’ என்று நாட்டை யே தனி உடைமையாக்க முனைவதன் மர்மம்தான் என்னவோ? எதிர்க்கட்சிகளுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? 4.1 ஏங்குதல் உணர்ந்திடுக" என்ற தனி அடி (இரு 5. வானமே பொழிக நீ! எம்மனோர் வாட்டம் துடைத்திடவே மாணமே பெரிதென்றெண்ணும் மறத் தமிழ்க் குலத்தார் மீது மாசுகள் கற்பித்தேனும் மகுடத்தைப் பறிக்கலாமென்று மத்தியில் உள்ளோர் சிலர் - அவதூறுக் கத்தியை வீசுகின்றார் - அவர் தம் புத்தியைத் தீட்டிடவே: பொழிந்திடுக வானமே - நீ தான் இந்தப் பகுதியே பாட்டின் நடுவனதாய் விளங்கும் பகுதி. ஆம்; நாட்டின் நடுவனதாய் விளங்கும் பகுதியைப் பற்றியதே பாட்டின் நடுவனதாய் விளங்கும் இப்பகுதி, வானமே பொழிக நீ என்ற தொடர் இரண்டாவது முறையாக இப்பகுதியில் இடம் பெற்றிருப்பது எண்ணத் தக்கது. ஆனால் இம்முறை இத்தொடருடன் சேர்ந்தே எம்மனோர்' என்ற சொல்லும் நெருங்கி இருப்பது நெருக்கத்தை நெருக்கடியை நினைவூட்டுவதாகும். இனி, இப்பகுதியில் உள்ள நடுவண் பகுதிகள் அண்மையில் நடை