பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 7. நன்றியற்றார் நெஞ்சம் நெருப்பு நெஞ்சம்; அந்த நெஞ்சத்தையும்கூட அழித்துவிட விரும்பாமல் வன்னிப்ப தையே மாண்பாகக் கருதும் மனிதராகிய தாங்கள் நெருப்பு அவிந்தால் போதுமே. விருப்பு வருமே என்று அருளோடு எண்ணுவது பொருள் சேர்ந்த புகழ் தருவ தாகும். அதனால்தானே வஞ்ச நெஞ்சமும் எஞ்சல் இல்லா ஈரம் பெறப் புனல் கரத்தை நீட்டிப் பருவ மழை பெய்யப் பாடல் பெய்கிறீர்கள். 7.2 'கரத்தை நீட்டி என்ற சொல்லுக்கே உன்ன மரபுத்தொடர்-பொருள் (idiom.meaning) நினைவத் தக்கது: 8. வானமே பொழிக கீ-தமிழ் வையகம் வாழவே! இவ்வாறு வரும் இந்த இறுதிப் பகுதிதான் தங்கள் பாட்டின் எல்லா வரிகளிலும் என் நெஞ்சைப் பறிகொண்ட குறிக் கோள் வரிகள். காரணம், இந்த இரண்டு வரிகளும் வறட்சிக் கொடுமை ஒழிந்த பின்னும்-பசுமை படர்ந்து பிணைத்த பின்னும்-தேவை; பெருந்தேவை. 8.1 வானம் பொழிவது ஒரு காலத்தில் வரும் வறட்சிக்காக மட்டும் இல்லையே; தமிழ் கூறு நல்லுலகம்’ என்று பனம்பாரனார் காலம் தொட்டுப் போற்றப்படும் தமிழ் உலகம் தழைப்பதற்காகவே அன்றோ? மேலும் தமிழ் உள்ள இடமே உயர்ந்தோர் உலகம்; உயர்ந்தோர் உள்ள இடமே தமிழ் உள்ள இடம். தமிழே ஒர் உலகம்: உலகமே ஒரு தமிழ். தமிழில்லா உலகத்தால் என்ன பயன்? உலகம் இல்லாமல் தமிழுக்கு ஏன் வாழ்வு? இந்த எண்ணங் களை எல்லாம் சிந்தையில் சிறக்க வைக்கும் தொடர் அன்றோ தங்கள் தமிழ் வையகம்."