பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் இதயத்தைத் தந்திடு அண்ணா! - ஒரு திறனாய்வு {1} அண்மையில் வெளிவந்துள்ள விருந்து - கவியரங்கில் கலைஞர் தமிழவேள் - டாக்டர் - கலைஞர் - முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் 5.8.67 முதல் 5.5.71 முடிய கலந்து கொண்ட கவியரங்கத் தலைமைக் கவிதைகள் பதினைந்தையும் 9.2.69 ஆம் நாள் சென்னை வானொலி வாயிலாகக் கலைஞர் சிந்திய கண்ணிர் கவிதை ஒன்றும் கொண்ட இப்புதுத் தமிழ்க் கவிதைப் படைப்பு நூல். இந்நூலின் இறுதிப் பகுதியாக இருப்பது இதயத்தைத் தந்திடு அண்ணா என்ற தலைப்பில் கலைஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணாவின் பிரிவாற்றாமல் வடித்த கண்ணிர் வரிகளே ஆகும். இந்நூலில் கால வரிசை முறை பிறழ்ந் தாலும் இப்பாடலே இறுதியில் இருக்கத்தேக்கது-உணர்வும் உயர்வும் இலக்கியச் சிறப்பும் கருதி இன்னொன்று. இந் நூலில் ஏனைய பதினைந்து தலைப்புகளும் பிறர் தந்தவை. இறுதிப் பாடலின் தலைப்போ கலைஞரே - அவர் கவிதையே தந்தது. வேறு சொற்களில் சொன்னால் பிற பதினைந்து கவிதைகளும் தலைப்புகளைப் பற்றி (இரு பொருளிலும்!) பாடியவை. ஆனால் இறுதிப் பாடலோ தன்னை ஒரு தலைப்பு பற்றப் பாடப்பெற்றது. இன்னும் வேறு சொற்களில் சொன்னால் முதல் பதினைந்து கவிதைகள் தலைப்பால் பிறந்தன; முடிவுக் கவிதையோ முடிவால் - முடிப்பால் - தலைப்பைப் பெற்றது! சுற்றி வளைத்துச் சொல்வதிலும் சுவை; நேரடியாகச் சொல்வ திலும் சில நேரம் சுவை. இரண்டாம் வகைப்படிச் சொன்னால் இறுதிக் கவிதை தலைப்பைப் பிறப்பித்தது.