பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

479 அவர் தமக்கு மரக்கறி உணவே போதும் என்றும் அறிவித்திருந்தார். இதனால் அவருக்குத் தரப்பட்ட விருந்துகளும் அவர் கருத்திற்கு எற்றவண்ணமே இருந்தன. ஒருமுறை பணிமுறை சார்பற்ற விருந்தின் போது மதுவிலக்கு, மரக்கறி உணவு இரண்டு பற்றியும் நான் அவரிடம் பேசினேன். திரு. கருணாநிதி, இங்கே எந்த வகைப் புலால் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியாது என்று மரக்கறி உணவைப்பற்றிக் குறிப்பிட்டார். மது விலக்கு பற்றிக் குறிப்பிடும்போது அடுத்த முறை தேர்தலில் தி. மு. க. வெற்றி பெற்றால் மதுவிலக்கைத் தளர்த்தும்" என்றார். அவ்வாறே நடந்தது. திரு. கருணாநிதி தன்மதிப்பு, தன்னுயர்வு கொள்கை களில் விடாப்பிடியானர். தானும் தன் மனைவியும் மட்டு மின்றித் தன்குழுவைச் சார்ந்த ஒவ்வொருவரும் எங்குச் சென்றாலும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தார். அவரும் அவ்வாறே எங்குச் சென்றாலும் நடந்து கொண்டார். (கலைஞரின் தனிச்சிறப்புகளில் இதுவும் ஒன்று-ந.ச.) கலைஞரின் இந்த போக்கு அயல்நாடுகளில் பயணம் செய்த மைய அரசின் அமைச்சர்கள் உள்ளிட்ட பல பெரு மக்களின் நடத்தைக்கு மாறாக அமைந்து மகிழ்வளித்தது. நானும் அவர் சென்ற விடமெல்லாம் சரியான மரியாதை முறைமை கடைப்பிடிக் கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதில் கருத்தாய் இருந்தேன். ஒருமுறை ஒரு சிக்கலான நிலைமை ஏற்பட்டது. மேற்கு ஜெர்மனியில் அப்போது ஆசிய வாரம். இதில் ஒரு நாள் மாலைநிகழ்ச்சிக்கு அவர் தலைமை விருந்தினர். அந்த திகழ்ச்சியில் பத்மா சுப்பிரமணியத்தின் பரத நாட்டியமும் கேரள உத்யோக் மண்டலியின் கதகளியும் இருந்தன. திரு. கருணாநிதி தமது காரிலிருந்து கலை அரங்கின் தலை வாயிலுக்கு வந்துவிட்டார். அவரை வரவேற்க எவரும் இல்லை. சற்றுநேரம் சுற்றும் முற்றும் பார்த்தார். என்னை நோக்கி, என்ன சொல்lங்க ? நாம் திரும்பிப்