18? திரு. கருணாநிதியிடம் புலமை மட்டும் இல்லை: அடக்கமும் மனித நேயமும் உடன் உறைந்திருந்தன. நன்னடத்தை பற்றிய அவர்தம் அழுத்தமான கொள்கை அயல்நாடுகட்கு வருகை புரியும் இந்தியப் பெரியமனிதர்" களிடமிருந்து அவரைப் ஒரு விதிவிலக்காகப் பிரித்துக் காட்டியது: மரியாதை, பண்பாடு ஆகியவற்றின் உறைவிடம் அவர். உண்மையில் பண்பு என்ற உயர் தனித் தமிழ்ச் சொல்லின் இரத்தினச் சுருக்கம் கருணாநிதி. திரு. என். வி. இராமன் தமது மூவுலகு என்ற அண்மை நூலில் 'துரத்துத் தொடர்புகள்' என்ற உன் தலைப்பில் 1-2 காந்தியும் நேருவும், 2-4 சுபாஸ் சந்திர போசும் வி. கெ. கிருஷ்ணமேனனும், 5. டாக்டர் எஸ். இ. ராதா கி ருஷ்ண ன், 6. இந்திராகாந்தி, 7. மு. கருணாநிதி, 8. நிராட்சி சவுத்திரி, 9. என்.ஜி.கோரே என்ற வரிசையில் ஒன்பது பேர் பற்றி எழுதியுள்ளார். அவர்களுள் நால்வரே அவர் நேரில் அறிந்த அரசியல் ஆட்யியலாளர். 1. டாக்டர் இராதாகிருஷ்ணன், 2. இந்திராகாந்தி, 3. கருணாநிதி, 4. கோரே. இந்த நால் வருள்ளும் இந்திய கட்சி அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற்றவர் இருவர். ஒருவர் வடநாட்டில் பிறந்த பரம்பரையாகச் செல்வமும் செல்வாக்கும் படைத்த அலகாபாத் ஆனந்த பவனச் செல்வி; மற்றொருவர் திருக்குவளை கிராமத்தில் பிறந்த கலைஞர் மு. கருணாநிதி. திரு. இராமன் இளமையிலேயே தமிழகத்தை விட்டு வெளிமாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் சென்று விட்டவர். படிப்படியாக இந்திய|அயலகத் துறையில் பதவி உயர்வுகன் பெற்று இப்போதும் பெங்களுரில் இருப்பவர். . தமிழர் என்ற பிறப்புரிமை உணர்வு மிக்க இந்த மனிதர் திருக்குறள் ஈடுபாடு மிக்கவர். தமது அயலக
பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/193
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை