பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழுரை {தமிழ்ப் புலவரின் கனவு கனவாகிறது) டாக்டர் மு. நாகநாதன் (பொருளியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) காலம், கண் இமைக்கும் நேரத்தின் வேகத்தைவிட விரைந்தோடுகிறது. பேராசிரியர் ந. சஞ்சீவியும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கண் இமைக்கும் நேரத்தில் நம்மை விட்டுப்பிரிந்து விட்டார். நின்றது போல் நின்றார்: நெடுந்துாரம் பறந்து விட்டார். ஆனால் அவர் விட்டுச் சென்ற எழுத்துகளும், நினைவுகளும் தமிழரின் நெஞ்சில் நிலைபெற்றவை. செந்தமிழ்த்தேனி, சந்தனத் தமிழ்க்கோர் காவலர், இன்றைய தமிழக முதல்வர் கலைஞரை டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் நினைக்காத நாளில்லை எனலாம். கலைஞர் தமிழக முதல்வராய்ப்பொறுப்பேற்கும் நாளே தமிழர்க்கு நன்னாள், பொன்னாள் எனக் கூறித் தாமும் அந்நாளைக் காணத் துடித்தார். அடிக்கடி கலைஞரைச் சந்தித்துத் தமிழ் நாட்டில் சூதுமதியினர் செய்யும் அரசியலை எடுத்து இயம்புவார். பேராசிரியர் சஞ்சீவி என்னைச் சந்திக்கும்போதெல்லாம் தலைவரைச் சந்தித்தீர்களா? நான் கூறிய கருத்துகளைத் தெரிவித்தீர் களா?' என்று கேட்பார், கலைஞரும் அவ்வாறே நான் பார்க்கும் போதெல்லாம் :புலவர் என்ன கூறினார்?' என்று புன்முறுவல் புரிவார். அவர்கள் நட்பு காலத்தால் முகிழ்த்த நட்பு: தமிழால் வளர்ந்து செறிந்த நட்பு. பேராசிரியர் ந. சஞ்சீவியின் துணைவியார் பேராசிரியை டாக்டர் கிருட்டிணா சஞ்சீவி மறைந்து விடுகிறார்: கலைஞர் ஊரிவில்லை. பயணம் முடிந்து வந்தவுடன்