பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16-vi செய்யும் தமிழினத்தலைவரின் ஆட்சி அமைகிறது: பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவியின் கனவு நனவாகிறது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ் நெஞ்சம் பேராசிரியர் ந. சஞ்சீவியை மறக்கவில்லை. சென்னைப் பல்கலைக் கழகத்தில் ந. சஞ்சீவி பணியாற்றிய துறையில் மார்ச்சுத் திங்களில் நடக்கவிருக்கும் தமிழ் மேம் பாட்டுத் திட்டம்' ஆய்வுக்கலந்தரங்கின்போது, சிந்தனை செம்மல்" டாக்டர் ந. சஞ்சீவியின் படத்தை, சங்கத் தமிழை எளிமையாக்கி இனிமையாக்கி வழங்கிய தங்கத் தலைவர் தமிழக முதல்வரின் கையால் திறக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். மார்ச்சுத் திங்கள் 27-ம் தேதி தமிழ்ப் பேராசிரியர்களின் தொண்டர்களின் கூட்டம் அணி வகுத்து வெற்றி முரசம் கொட்டிக் கலைஞரை வரவேற் கிறது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவியின் படத்தினைக் கலைஞர் திறந்தார்; பேராசிரியர் வாழ்ந்த தெருவிற்கு டாக்டர் சஞ்சீவி தெரு’ என்று அறிவித்தார்; சஞ்சீவி பருவதத்தின் சாரலிலே தமிழ் உணர்வை, தமிழர் உணர்வைப் போற்றினார். இவ்வாறு பேராசிரியர் ந. சஞ்சீவியைக் கலைஞர் போற்றிய நிகழ்ச்சிகளும், பேராசிரியர் ந. சஞ்சீவி கலைஞரைப் போற்றிய நிகழ்ச்சிகளும் ஏராளம் உண்டு. தமிழர்கள் வாழ்வில் பொற்காலத்தைப் படைக்கும் கலைஞரின் 68-வது ஆண்டு முழுமை பெறும் பிறந்தநாளில் பேராசிரியர் சஞ்சீவி கலைஞரின் திறன்போற்றிய கட்டுரை களை எடுத்துத் தொகுத்து வெளியிடுவதைக் கண்டு மகிழ் கிறேன்: வரவேற்கிறேன். பேராசிரியர் ந. சஞ்சீவி எழுத்துப்புகழ் பரப்பும் இந்த அரிய நூலைத் தங்களது சொந்த செலவில் வெளியிடும் பேராசிரியர் மகள் டாக்டர் எழிலரசி, மருமகன் டாக்டர் பாலசுப்பிரமணியன் முயற்சி வெல்க! வாழ்க தமிழ் வாழ்க கலைஞர் ! வளர்க தமிழ்நாடு 1