பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கண்ணகியே தூண்டுகிறாள் என்று கலைஞர் கூறுவதை எடுத்துக்காட்டி அத்தகைய பாத்திரப் பண்பில் அடியோடு தடுபட்டுப் பேசுகிறார் அண்ணா. இனி, பேரறிஞர் அண்ணா கலைஞரின் கருத்தோவி யத்தைத் திறனாய்வு செய்யும் வகையில் அடுத்துக் காட்டும் எடுத்துக் காட்டைக் காண்போம் ; அது வருமாறு : இன்னொரு முக்கியமான மாறுதல் : சிலப்பதி காரத்தில் கண்டுள்ள ஒரு நிகழ்ச்சியில் கருணா நிதியால் சிறப்புமிகு முறையில் அமைக்கப்பட்டிருக் கிறது. சிவப்பதிகாரம் தரும் விளக்கப்படி அரண் மனையின் தலைமைப் பொற்கொல்லர்தான் உண்மையான குற்றவாளி என்பது அறிந்த ஒன்று. இதனால்-இப்பழியால் பொற்கொல்லர் சமுதா யத்தின் சுயமரியாதையே பாதிக்கப்படும் உணர்வு , , ,్న భిః , ஏற்படுகிறது. இளங்கோவடிகளுக்கு அத்தகு உள்நோக்கம் இருந்ததென யாரும் கூறிட முடியாதெனினும் அந்தப் பொற்கொல்லர் சமுதாயம் முழுமையுமே பெரியதொரு வெறுப்பை ஏற்க வேண்டியிருக் கிறது. இந்த வெறுப்பை-பழியைக் கருணாநிதி துடைத்தார், பல்வேறு சமூகங்களுக்கிடையே யுள்ள நல்லெண்ன-நல்லுறவில் அசைக்க முடி யாத நம்பிக்கை உடையவராதலால் இப்பழியைத் துடைத்திட விரும்பினார். அவரது எழுத்தோவி யத்தில் போற்றத்தகும் முறையில் அந்த நற்பணி யைச் செய்தார்.