பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மயங்கிப் புத்தாண்டுகளைப் பாழ்படுத்தி விட்டனரே ! ஒரு பாடத்தை இப்போதேனும் (தலைவர் கலைஞர் உள்ளிட்டோரும்; கற்க வேண்டும். சிறு கருத்து வேறு பாடுகட்காகச் சிங்கத்தை வெறுத்து சிறு நரியிடம் சிக்கக் கூடாது; ஒட்டகத்துக்கு இடங்கொடுத்துப் பின்னர் ஒப்பாரி விடக் கூடாது செந்நீர் தண்ணிரிலும் வலுவானது (Blood is thicker) கலைக்கும் காசுக்கும் மயங்கிப் பொருளல்லாதாரைப் பொருளாளர் ஆக்கக்கூடாது. இரத்தம் என்ற இனப் பார்வை எப்போதும் வேண்டும்; இல்லையேல் களை பயிராகும், கழுத்தருக்கும். பழிமலைந்து எ ப் து ம் ஆக்கம்’ (குறள். 5ே7; பாழ் என்பதையும் உத்தமர் காந்திவழி வந்த காங்கிரசும், அண்ணா வழிவந்த நாவலரு மேனும் நன்குணர வேண் டு ம். இதற்கு மேல் என் போன்றார் சொல்ல என்ன இருக்கிறது ? எளிமையாக இனிமையாக ஏழையர் தொண்டில் . எல்லோரும் மகிழ்ந்து மதிக்கப் பொதுவாழ்வின் பொன் விழாவைக் கொண்டாடும் தலைவர் கலைஞர் தம் பொது வாழ்வின் மணிவிழாவைக் கொண்டாடும் முன் மன்பதையே மகிழும்படி தமிழ் மக்கள் புத்தாண்டுக் காலத்திற்கு அவரைக் கட்சி வேறுபாடின்றித் தமிழக முதல்வராக்கி மகிழ்ந்து பயன்பெறல் வேண்டும். நாட்டு நலங்கருதி . நடுநிலையோடு - தலைவர்கள் இதைச் சிந்தித்தால் சிக்க லின்றிச் செய்யலாம். தமக்காகக் கலைஞர் இனியும் வாழார்: தமிழர்க்காக சமநீதிக்காகவே வாழ்வார்; இது காலத்தின் கட்டளை பட்டறிவின் பாடம். ஒரு தலைவரின் . ஒரு கட்சியின் - வெற்றி அந்தக் கட்சியில் உறுப்பினர்கள் முதல்நிலை (அல்லது முன் னோடித்) தலைவர்களை மட்டும் பொறுத்தது இல்லை , இவர்கள் பங்கெல்லாம் கால் பங்குதான். ஆனால் .