பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 பிறப்புக்கும் பல்லாற்றானும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளார்கள். 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" & & ဂ္ယီ கலைஞர் எண்ணியது எண்ணமாகும் ; சொல்லியது. சொல்லாகும்; செய்தது செயலாகும் ; வாழ்வாகும். இந்த ஆண்டு கலைஞரின் பிறந்த நாள் பிறக்கும் அதே நாளில் தொல்காப்பியர் தோன்றிய நாட்டில்-மாவட் டத்தில்-முதல் அனைத்திந்திய திராவிட மொழியியல் மாநாடு கூடுவது தெய்வப் பொருத்தம். இதன் பயனாகவும் கலைஞர் ஆட்சியில் திராவிட அரசியல் ஒருமைப்பாடும் சாதி சமயச் சழக்கற்ற திராவிட நாகரிக மறுமலர்ச்சியும் ஏற்படுதல் திண்ணம். கலைஞரின் கை கன்னித் தமிழ் வளர்க்கும் கை ; ஏழை எளியோர் கண்ணிர் துடைக்கும் கை , வயிற்றுக்காக நடிக்கும் புல்லரினும் வாய்மைக்காக இடிக்கும் புலவரைப் போற்றும் கை உண்மைக்கும் உழைப்புக்கும் ஒழுக்கத் துக்கும் உயர்வு தரும் கை ; உண்மையும் உணர்ச்சியும் நிறைந்த ஒளிவு மறைவு அற்ற உத்தமரைக் காக்கும் கை; அழுக்காறு அகற்றும் கை ; அருட் கடல் பெருக்கும் கை; அறிஞர் வழியைக் கலைஞர் வழியாக-அறிவைக் கலையாக -மாற்றும் கை, அத்தக் கையே-தமிழ்த் தாயின் தனிப்பெருங்கை அந்தக் கையே-.ெ ச ந் த மி ழ் நா டு முழுவதுக்குமான செங்குட்டுவன் செங்கை, அந்தக் கையின் வாழ்வே அறிவின் வாழ்வு அந்தக் கையின் வெற்றியே அருளின் வெற்றி ! நம் கலைஞர்-நாட்டின் மாண்புமிகு முதல்வர்-வாழ்க ! வெல்க ! !