பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதி காக்கும் தயாளர் திாய் தெய்வம்; தந்தை தெய்வம்: ஆசிரியர் தெய்வம்; அரசரும் தெய்வம்-இது பழைய மரபு. என்றாலும் இது இன்றும் காக்கவேண்டிய இனிய மரபு. அந்த வகையில் நாலரைக்கோடித் தமிழ் மக்களின் நல் வாழ்வுக்குப் பொறுப்பேற்றிருக்கும் நம் மாண்புமிகு முதல்வர் அவர்களும் என் தெய்வம்-இல்லை-நம் தெய்வம். *திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்’ என்னும் திருவாக்கு தெய்வவாக்கு என்போரும் இல் அண்மையை ஒப்புவர். எனவே, மாண்புமிகு தமிழக முதல்வரை நாவார மனமார வாழ்த்துவதும் வணங்குவதும் நம்மைக் காக்கும் தமிழ்த் தெய்வத்தை-தமிழர் தெய்வத்தை வாழ்த்து வதும் வணங்குவதும் போன்றதே ஆகும். மாண்புமிகு முதல்வர் அவர்கட்கு என்னைப் பிடிக்கவில்லை என்றாலும் அவர் எனக்குப் பிடிக்காமல் இருக்கக்கூடாது. காரணம் அவர் என் தாய்நாட்டில் தமிழ் முதல்வர்; தனி முதல்வர். என் வாழ்வால் தமிழுக்கும் தமிழருக்கும் ஏற்படக் கூடிய வனம் எள்முனை-காரணம் நான் வெறும் ஆராய்ச்சி யாளன்; ஆனால், என் தாய்நாட்டின்-தமிழ்நாட்டின் முதல்வரால் தமிழுக்கும் தமிழருக்கும் ஏற்படக்கூடிய நல் வளம்-பெருவளம்-இமய முனை. காரணம் அவர் பெரும் அரசியலாளர். எள் முனை-இமயமுனை-எது பெரிது? சின்னக் குழந்தையும் விடை சொல்லும்! என்னிலும் நான்கே ஆண்டுகள் மூத்தவர் என் முதல்வர். தமிழ்நாட்டில் வாழும் உலகம் போற்றும் அரசியல் மேதை கன் ஒரிருவரின் வயதில் ஏறத்தாழ சிறிது பாதியே உடையவர். ஆனால் கலைஞர் இந்த நாட்டின் முதல்வர்: