பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழக-இந்திய - ஏன் ? உலக - அரசியல் வரலாற் றிலும் கலை; இலக்கிய வரலாற்றிலும் நிலையான நிறை வான வாழ்வு பெற்றவர் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் : எழுத்து, சொல். செயல் என்னும் மூன்றிலும்-எதனைவிட எதில் வல்லவர் என இனங்காண முடியாத அளவிற்கு மூன்றிலும்-மேம்பட்ட மேம்பாடு உடையவர் இவரைப் போல் வேறொருவர் இல்லை. அப்படிப்பட்ட பெருந்தகையாளரைப் பற்றி-வாழ் வாங்கு வாழ்ந்த வாழவைக்கும் பண்பாளரைப் பற்றி-என் தந்தையார் சிந்தனைச் செம்மல் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் கடந்த பதினேழு ஆண்டுகளாக எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இலக்கியத் தலைவர் கலைஞர்" என்னும் இந்நூல். பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் கலைஞர் மீது கொண்ட நீங்காத பற்றை அவரிடம் நெருங்கிப் பழகிய அனைவரும் அறிவர். இப்பற்றின் அடிப்படைக் காரணம் அவரிடம் ஆழமாக வேரோடியிருந்த தமிழ்ப்பற்றே. தமிழறிந்த தமிழர்தான் தமிழகத்தின் முதல்வராய் வருதல் வேண்டும் என்னும் தீராத வேட்கை கொண்ட பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்கள் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரானதும் துள்ளிக் குதித்தார் ; நெருக்கடி வேளையில் நீக்கப்பட்டதும் துவண்டு போனார் ; மீண்டும் கலைஞர் வருவார் என்ற தொலைநோக்குப் பார்வை யோடே வாழ்ந்தார் அவர் கனவு நனவாகியது ; ஆனால் கனவு கண்டவர்தான் இன்று இல்லை.