பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சிவாஜி, என வெளிவர வல்லவர்-தன் தாய் மொழிக் காகவும் தாய் நாட்டிற்காகவும் உயிரும் கொடுக்கத் துணியும் உத்தமர்-ஒருவர் உண்டென்றால் -ទ្វ மாண்புமிகு நம் கலைஞர்-டாக்டர் அவர்களே ! எதையும் எவரிடமும் எதிர்பார்க்கும் இயல்பைப் பெரிதும் பிறவியிலேயே பெறாத ஒருவன் எண்ணிப் 1 trrrfá: கிறேன்.--கலைஞர் பெருந்தகையிடம் நாம் காணும் உயர்வு களுள் எல்லாம் உயர்ந்தது எது? எண்ணி எண்ணிப் பார்க் கிறேன்-தெளிவின்பத்திற்காக - அதனினும் பேரின்பம் எனக்கு இல்லை என்பதால். ஒரே ஒரு விடைதான் திரும்பத் திரும்பக் கிடைக்கிறது: தகுதி காக்கும் தகுதி. ஆம். கலைஞர் பெருந்தகை தகுதி காக்கும் தகுதி பாளர்-தயாளர், தன் தகுதி காக்கிறார்; தன் தாய் மொழியின்-தாய் நாட்டின் தகுதி காக்கிறார்; தன் தாய் மொழியை-தாய் நாட்டைக் காப்பவரைக் காக்கிறார். உழைப்பாளரைஉண்மையாளரை-ஒழுக்கத்தாரை-தன் விருப்பு வெறுப்பு களைத் தள்ளி வைத்துவிட்டுத் தயவுடன் காக்கிறார்; பொதுநலம் போற்றி, எதிரி என்று மருள்வதில்லை; நண்பர் என்று மயங்குவதில்லை. தன் தோட்டத்து எட்டியாயினும் வெட்டுவார்; மாற்றான் தோட்டத்து மல்லிகையாயினும் மணம் பார்ப்பார். ஆம். தகுதியின் தொகுதி அவர்! வாழ்க டாக்டர் கலைஞர் அவர்கள்!