பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எதிர்ப்பாளராய் மாறி நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றது அக்கட்சியின் வரலாற்றிலேயே மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம் கனவிலும் பதவிப் பற்று அற்ற தந்தை பெரியார் நீதிக் கட்சியை மிட்டா-மிராசுதார் கட்சி என்ற நிலையிலிருந்துவிடுவித்து, மக்கள் இயக்கமாக-இனப்போர் இயக்கமாக மாற்ற எண்ணியது இயற்கை சரியும் கூட. இதன் பயனாக 1944-ல் சேலத்தில் நீதிக்கட்சி திராவிடக் கழகமாக மாறியது. இப்பேர் மாற்றத்துக்கும்-பேர் வாயிலாகப் பெருங் கொள்கை மாற்றத்துக்கும் வழி செய்த தலைவர் தந்தை பெரியாருக்கு வாகை குடித்தந்த தளபதி பேரறிஞர் அண்ணா எனலாம். எனக்குத் தெரிந்த வகையில் நாற்பது களில் அரும்புகட்ட ஆரம்பித்த பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வாழ்வு சேலம் மாநாட்டிலேதான் போதாகியது எனலாம். 1946-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி பங்கு பெறவில்லை. ஆறாண்டுக் காலம் காங்கிரசு ஆட்சி நடந்தது-சென்னை மாநிலத்தில், உலகப் போருக்குப் பின்-உள்நாட்டு விடுதலைப் போருக்குப்பின்-ஏற்படும் எல்லாச் சிக்கல்களும் ஏற்பட்டன. உணவுப் பற்றாக்குறை, மொழி இன மாநில-மாவட்ட சாதிப் பூசல்கள் கிளம்பின. பொதுவுடைமையாளர் கை வலுத்தது. இந்நிலையில் 1952-இல் நடைபெற்ற பொது தேர்தலில் தென்னகதமிழக அரசியலில் புதுத் திருப்பம் ஏற்பட்டது. அதன் விளைவாகக் காங்கிரசு ஆட்டம் கண்டது. அந்நிலையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் பேரறிஞர் அண்ணா. திராவிடப் பிரிவினைக் கொள்கையை ஒப்புக்கொள் வோரை-ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போடுவோரை -தாம் புதிதாகத் தொடங்கிய தி.மு.க. ஆதரிக்கும் என்றார், துணிந்து. தம்முடைய சிந்தனைச் சிறப்பாலும்அரசியல் தொலை நோக்காலும்-பாராளுமன்ற வாழ்வில் கொண்ட பற்றாலும் பேரறிஞர் அண்ணா தம்முடைய