பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 தம் தம்பிகளுடைய - அறிவாற்றலையும் - உழைப்பாற் லையும்-சொல்லாற்றலையும்-செயலாற்றலையும் நம்பித் தம் கொள்கையை ஆதரிப்போரைத் தாம் ஆதரிக்க எடுத்த முடிவு-துணிவு மிக்க தொலைநோக்கு நிறைந்த-கட்சி வளர்ச்சி-கருத்து வளர்ச்சிப் பணியாகும். நாட்டு மக்கள் கருத்தின் ஆழமறிய பேரறிஞர் செய்த அடக்கமும் ஆண்மையும் நிறைந்த பெரு முயற்சியே அது ஆகும். இதன் பயனாகத் தி.மு.க. நாடாளுமன்ற நன்னெறியில் தன் வலக் காலைப் பலமாக ஊன்றியது எனப் போற்றலாம். 1952.பொதுத் தேர்தல்கள் முடிந்ததும் சென்னை சட்டமன்றத்தில் எந்த ஒருகட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லை. காங்கிரசுக்குள்ளே ஏற்பட்ட மொழி-இனசாதிப் பூசல்கள் அக்கட்சியை உருக்குலைத்து விட்டன. 1952 - லேயே- இந் தி ய விடுதலை இயக்கம் முடிந்த பத்தாண்டிலேயே காங்கிரசுக்கு இக்கதி நேர்ந்தது இரங்கத்தக்கதுதான்-ஆனால் பல்வேறு காரணங்களால் அது தவிர்க்க முடியாதது. இந்நிலையில் வேண்டா வெறுப்பாய் - பார்ப்பன எதிர்ப்பில் - தந்தை பெரியார் வளர்த்த தன்மான உணர்வில் இதற்குள் ஊறிவிட்ட காங்கிரசு கட்சியினரே-பதுங்கும் புலிகளாக மாறி-- இராசாசியிடம் நாட்டாட்சியினை ஒப்படைத்தனர். முன்னர் கட்டாய இந்தித் திணிப்பால் ஏற்பட்ட நிலையை இம்முறை இராசாசி குலக்கல்வித் திட்டத்தால் உண்டு பண்ணினார் ; ஒய்வு பெற்றார் ! இந்நிலையில் இம்முறையும் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி இராசாசியாலேயே-அவர் தம் ஆரிய மனப் பான்மையாலேயே-என்பது மட்டும் ஆழ்ந்து நினைக்கத் தக்கது. இந்நிலையில், 1. திராவிட இயக்கம், தீவினைப் பயனால் இரு பிளவாகிக் கிடந்தது; 2. பார்ப்பன எதிர்ப் புணர்ச்சியைத் தென்னக காங்கிரசே-சிறப்பாகத் தமிழ்