பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எனது தந்தையின் மறைவு எனது சிறு குடும்பத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு. இந்தச் சூழலில் எனது தந்தைக்கு, எங்களிடம் வாழும் அவர் క్రణ ఎత్త్రాతత్తా நாங்கள் செய்யும் சிறு பணியே அவரது எழுத்துகளைத் தொகுத்தல். பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி ೨ಮಿಗೆ ಹಣಿ! அவரே பலமுறை சொல்வியிருப்பது போல், ஆய்வையும் எழுத்தையும் மட்டுமே அறிந்தவர்; தமது வாழ்வையும் இவ்விரண்டையும் பின்னியே அமைத்துக் கொண்டவர். அவர், முத்தமிழ்க் கலைஞரின் முத்திறன்களைப் போற்றி மூவகைச் சூழலிலும் எழுதிய-முக்கனிச் తాగాGుణా தினைக்கின் இனிக்கும் - கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் தமிழ்ப் பற்று, தமிழின உணர்வு, வரலாற்று நோக்கு, திறனாய்வுத் திறன், ஆர்வ இழை, உலக உணர்வு ஆகிய அனைத்தும் இழையோடி இருப்பதைத் தமிழ் உலகம் நன்கு உணர்தல் கூடும், பல்வேறு பணிகளுக்கிடையேயும் இந்நூலுக்குத் தக்க அணிந்துரை வழங்கிய மாண்புமிகு கல்வி அமைச்சர் க. அன்பழகன் அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம். இந்நூலை வரிவரியாகப் படித்துத் தக்க மதிப்புரை வழங்கிய நல்லறிஞர் டாக்டர் சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்களுக்கும், புகழுரை வழங்கிய இணைப் பேராசிரியர் டாக்டர் மு. காகநாதன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையோம். இந்நூல் அச்சாகி வெளிவர முழு ஒத்துழைப்பு வழங் கியவர் சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் ஆய்வு மைய இணைப் பேராசிரியர் - பேராசிரியர் டாக்டர்