பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெற்றுள்ளன. ஏலம் (வ. 8), மணம் சுவை இரண்டும் தருவது. தேனின் (வ.3. 10) இடம் தனி;இவற்றை அடுத்து இசைப் பண்புகளும் இசை கைவினைக் கலைப் பொருள் களும் (வ.18) உடலுயிர்ப் பொருள்களும் (வ. 14, 15). இலக்கியச் சிறப்புகளும் (வ. 15), தெய்வப் பொருளும் (வ. 17), உறவுப் பெயரும் (வ. 18) இடம் பெற்றுள்ளன. தமிழின் இலக்கியச் சிறப்பாகச் சங்கச் சால்பும் இசைச் சிறப்பாகச் சந்தமும் சிந்தும் சிறப்பிக்கப்படுகின்றன. உடலுயிர்ப் பொருள்களாக இவைகளே போற்றப்படு கின்றன. தெய்விகப் பொருளில் அமுதும் பெருமை பெறுகிறது. உறவு முறைப் பெயர்களுள் தாய்க்கே தனியிடம்- சிறப்பிடம் இருப்பது கலைஞரின் வாழ்வோடு பொருத்தியிருக்கும் வாய்மைப் பண்டை - தூய்மைப் பண்பை நிலை நாட்டுவதாகும். இத்தகு வகை தொகை ஆராய்ச்சியால் தமிழிலக்கியப் பரப்புள் வேறு எந்த ஒரு புலவரும் இந்த அளவிற்குப் பைந் தமிழின் பல்வளத்தையும் - பல்திறனையும் ஒருசேரப் பாடியுள்ளார் என்று எண்ண இடமில்லாமல் இருக்கிறது. (4) கலைஞர் காட்டும் தமிழின் வாழ்வியற் பண்புகளாகிய அருமை, இனிமை, வீரம், முதுமை, பழமை, மணம், செம்மை, முக்கூறு, ஆவேசம், முருகு, பசுமை, திரு, சுடர், இன்பம், வாழ்வித்தல், இசைமை, எளிமை, தித்திப்பு, ஆட்சிவளம், தூய்மை, வண்ணம், பெருமை, பயிற்சி, மக்கள் மதிப்பு, அழகு, கூர்மை, இளமை, பொதுமை, அருள், தெளிவு, உறுதிபயத்தல் ஆகிய 32 பண்புகளும் கலைஞர் கவிதையிலேயே - ஏன்? தமிழ்த்தாய் பற்றிய அவர்தம் புகழுரைகளிலேயே காணப்படலே இன்பத்துள் இன்பம் பயப்பதாகும். இது விரிப்பின் பெருகும்; தொகுப் பின் எஞ்சும்."