பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 இனி ஓர் நல்ல இலக்கியத்தில் ஊறிக் கிடக்கும் - ஊடுருவிக்கிடக்கும் இயல்புகளுள் தலையாயவற்றை ஒரு சில எடுத்துக்காட்டுகளுடனேயே கண்டு களிப்போம். 1. வளர்ச்சி உருவம் கவிதையின் உயிர் உணர்ச்சி, உள்ளம் பொருள்; உடல் உருவம். இம் மூன்றும் இணைந்து அமைந்தாலே வாழ்க்கை -இன்பம். கலைஞர் கவிதைகளில் உயிருக்கும் உள்ளத் துக்கும் பற்றாக்குறை இல்லை. ஆனால் உடலுக்கு?....... கவிதையின் உடல் உருவ வளம் அமைவது யாப்பறி வாலேயே ஆகும். ஆனால் இதைத் தாம் பெறவில்லை என்பதை எவ்வளவோ துயரத்துடன் கலைஞரே திரும்பத் திரும்பச் சொல்லும்போது (6, 36, 48, 70, 89, 90, 137-8) நம்மை அறியாத பரிவுணர்ச்சியே அவர்பால் பற்றுகிறது. இதை எண்ணும்போது அண்மையில் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் நம் கலைஞர் உடல்-உள்ளம் பற்றிச் செய்த ஒரு மதிப்பீடுதான் நினைவுக்கு வருகிறது. கலைஞரை நேரில் கண்டால், அவர்-நோஞ் சான் உடம்பினர்தான் ! அவர் இரவு பகலென்று பாராமல்உழைப்பதைப் பார்த்தால், இவர் உடம் பென்ன கல்லோ, இரும்போ என்று கருதி வியப்புற வேண்டியிருக்கிறது (செங்கோல் 3-6-1973) கலைஞரின் கவிதைகளில் உணர்ச்சியும் உருவமும் ஒன்றுபட்டும் இருக்கும் என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக் காட்டு இயற்சீர்களாலேயே இயன்ற பின்வரும் வரிகள் : தேனே கனியே தினையே அமுதே ! ஊனே ! உயிரே தமிழே ! தாயே ! வணக்கம் சொன்னேன் வாழ்க நன்று (43) கலைஞரின் கவிதைகளில் உள்ள வரிப் பிளப்புகள்அமைப்புகள் பற்றிய என் கருத்து: அவை நாடகத் திரைக் கலையின்-தமிழின் பழக்கத் தாக்குதலாக இருக்கக்கூடும்