பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 என்பதுதான். இப் பண்பின் காரணமாகவே கலைஞர் கவிதைகளைத் தொட்டால் போதும் அவை விட்டால் போதும் என்னும் வகையில் நம்மை அமுக்குப்பிடி போட்டு விடுகின்றன. 2. உவமை-உருவகம்-கற்பனை ஐந்திலக்கணத்துள் எழுத்து, சொல், யாப்பு மூன்றும் இயைந்தால் உணர்ச்சியும் உருவமும் கிடைத்து விடும். பொருள் பொது அணிகளுள் அணியது-அடிப்படை யானது உவமை. உவமையின் சுருங்கிய வடிவமே உருவகம். எனவேதான் பழந்தமிழ் இலக்கணம் தொல் காப்பியம் அணியியல் என்னாது உவமவியல் எனவே ஒது கிறது. இவ்வகையில், பட்டியல் 3 வரிசை எண் ?. தேன் தமிழ் 10. வீணைத் தமிழ் 13. தமிழ்த்தேன் 15. ஆணிப்பொன் தமிழ் 16. முத்தமிழ் 17. முருகுத் தமிழ் 18. தமிழ்ப் பூவாரம் 19. தேனே! கனியே! தினையே! அமுதே! ஊனே! உயிரே! தமிழே! தாயே! 20. தமிழாறு 2.கி. அடலேறு மொழித் தமிழே!-இன்பக் கடலேறு மலைத் தமிழே! 25. பைந்தமிழ்த் தேர் 28. உரித்த சுளைத் தமிழ் 31. தண்ணிலவாம் தமிழன்னை 32. முத்தனைய தமிழ்