பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? ஆம். உட்பகையையும் புறப்பகையையும் ஒழித்து இன்பங் கான வீரமே வேண்டும். மேலும்,இவ்வரிகள் நம் கலைஞர் தமிழ்ப் பகையை எதிர்க்கும் எதிர்ப்பிலே-இயக்கத்திலேவளர்ந்த வலிமையையும் வலியுறுத்தும். ஆட்சிமொழி, பயிற்சி மொழி பற்றிய அவர் குறிப்புகள் அவர்தம் ஆக்க அரசியல் ஆண்மைக்கு அடையாளங்கள். 2. மக்கள் மதிப்பையே மதிப்பாக மதிக்கும் மதிப்பீட்டு மாண்பு முன் பத்தியின் முடிவிலேயே நம் கலைஞர்-முதல்வர்ஓர் இயக்கத் தலைவர்-அரசியலாண்மையாளர் என்பது எவ்வாறு அவர்தம் கவியாண்மையாலேயே விளங்குகிறது எனக் கண்டோம். ஈண்டு மேலும், அவர் ஒரு மக்கள் மனிதர்-தலைவர் (People’s Leader) என்பதைக் காண் போம். வரிசை எண் ....................................மக்கள் 器登 து.ாவிய மலர் மலைமேல் மாத்தமிழாள் நடந்துவர (ப.125) இவ் வரிகள் வாயிலாக மேற்குறித்த உண்மை உறுதி பெறும். புலவர் புகழ் தமிழ்" என்றே இருந்த நிலையை இந்நூற்றாண்டின் - இருபதாம் நூற்றாண்டின் -இயல் புக்கும்-இன்றியமையாமைக்கும் ஏற்ற பொதுமக்கள் புகழ் தமிழ்’ ஆக மாற்றிய முதல் புலவர் நம் கலைஞர்-முதல்வர் எனலாம். 3. ஊன்றுகோலாய் உதவும் உயர்வு கலை இலக்கியம் கவிதை மாந்தர் வாழ்வுக்கு விருந் தாய் அமைந்தால் போதாது; மருந்தாயும் அமைய வேண்டும்.