பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் புகழ் அறிஞர் அண்மையில் வெளிவந்திருக்கும் அருந்தமிழ்-புதுத் தமிழ்-இலக்கியம் கவியரங்கில் கலைஞர். 5-8-67 முதல் 5.5.71 முடிய நான்காண்டுக் காலத்தில் தமிழ்வேள் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் J5 (பதினைந்து) கவியரங்களில் தலைமை தாங்கிப் பாடிய 15. (பதினைந்து) கவியரங்கத் தலைமைக் கவிதைகளும் பேரறிஞர் அண்ணா பிரிவாற்றாது படைத்த கண்ணிர்க் கவிதாஞ்சலி ஒன்றும் கொண்ட தொகுப்பே கவிரயங்கில் கலைஞர். இந்நூலுள் 1. விடுதலை வீரர்கள், 2. ஐம் புலன், 3. காதலா வீரமா?, 4. நீர்க் குடும்பம், 5. பில வங்க ஆண்டு, 6. புதிய பாதை, 7. அறுமறையில் அறுவர், 8. உடமைகள் பத்து, 9. பாரதிதாசன், 10. வாழ்வெனும் பாதையில், 11. பொங்கல் திருநாள், 12.கணக்கு, 13. நேரு கண்ட ஜனநாயகம், 14. பாரி விழா, 15. பாரதியார், 16. இதயத்தைத் தந்திடு அண்ணா என்ற தலைப்புகளில் உள்ள கவிதைகளுள் முதல் பதினைந்து கவியரங்கக் கவிதைகளிலும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி வரும் செய்திகளை மட்டும் திறனாய்வு செய்வதே இவ்வெளிய கட்டுரையின் பெரிய நோக்கம். "இதயத்தை தந்திடு அண்ணா என்ற தலைப்பில் இதயத்தைப் பிழிந்திடும் வகையில் கலைஞர் கண்ணிரால் எழுதியுள்ள கவிதையைத் தனியே திறனாய்வு செய்வதே அக் கண்ணிர்க் கவிமலரின் தனிச் சிறப்பைத் தினையள வேனும் உணர்தற்குரிய பனையளவு சான்றாகும். இவ்வகையில் 5.8.67-ஆம் நாள் திருச்சி (ராப்பள்ளி) வானொலியில் விடுதலை வீரர்கள் பற்றிய கவியரங்கில் தலைஞர் தலைமையேற்றுப் பாடிய தலைமைக்

  • காஞ்சி, பொங்கல் மலரில் (1972) வெளிவந்த கட்டுரை.