பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁亭 கவிதையே நமக்குத் தலைமைச் சான்றாய் அமைகிறது. அக்கவிதையில் முதல் வரிகள் இவை: இமிழ் கடல் வேலித் தமிழகம் ஈன்ற என்னுயிர் அண்ணன் அன்னையர் தந்தையர் பொன்னொளிச் சோதரர் புகழ்மிகு பாவலர் கண்மணித் தமிழின் காவலர் யாவரும் இற்றைத் திருநாள் ஏற்பீர் வணக்கம் இவ்வரிகளில் முதல் ஒன்றரை அடிகள் ஊன்றிக் கவனிக்கத் தக்கன. என்னுயிர் அண்ணன்' என்பது பொது வாக இருப்பினும் கலைஞர், பேரறிஞர் அண்ணாவையே குறிக்கிறார் என்பது வெளிப்படை. வேறு யாரை அவர் என்னுயிர் அண்ணன்' என்று வாழ்த்தி வணங்க முடியும்? இனி, இந்த முதல் இரு வரிகளிலேயே கலைஞரின் சொற். தொடர் கருத்துச்சிலேடை (இந்த இடத்தில் சொற். இலேடை அன்று) அவரை அறியாமல்ே அமைந்துள்ளதோ என்று கருத வேண்டியுள்ளது. (அப்படி ஒரு கவிஞர் வாக்கு அமையின் அது தனிச் சிறப்பே ஆகும்!) காரணம் சிலம்பு புகழ் இமிழ்கடல் வேலித் தமிழகம் அண்ணாவை ஈன்றதா அல்லது முன்னை ஆட்சிகளால் மறுக்கப்பட்ட தமிழகம்’ என்ற பெயரைத் தர உறுதிகொண்ட பேரறிஞர் அண்ணா இமிழ்கடல் வேலித் தமிழகம் ஈன்றாரா என்ற கேள்வியே! (2) பேரறிஞர் அண்ணா பற்றிய இரண்டாவது குறிப்புக்கு இடத்தருவது 13-8-68ஆம் நாள் குடத்தை மூர்த்தி கலை அரங்கில் புதிய பாதை’ என்ற தலைப்பில் நடை பெற்ற வேளாண்மைக் கவியரங்கில் கலைஞர் அவர்கள் தந்த தலைமைக் கவிதையே ஆகும். இயற்கை வளமும் இலக்கிய வளமும் கொஞ்சிக் கூத்திடும் இக் கலையரங்கக் கவிதையின் முடிவாக அண்ணா முழக்கம் கேட்கிறது. அது வருமாறு :