பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 (4) நான்காவது சான்றாக நமக்குக் கிடைப்பது 12-1-70-இல் சென்னை வானொலியில் பொங்கல் திருகாள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் கலைஞர் தந்த தலைமைக் கவிதை. இக் கவியரங்கக் கவிதையில்தான் முதன்முதலாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிரிவாற்றாமை பீறிட்டு வருகிறது எனலாம். அதன் வலி (இரு பொருளிலும்) பின் வரும் வரிகள் காட்டும்: உரம் மலிவாய் வழங்குதற்கும்-ஈகைக் கரம் வேண்டுமன்றோ? அதனைத் தரமறிந்து அண்ணன் தந்துவிட்டே போயுள்ளார். உரம்-கரம்-தரம் ! எதுகை மதுகை இனிது. இக்கவிதையில் இன்னுமோர் இடத்தில் புறத்தார்க்கு மிகமிகக் குறிப்பாகவும் அதத்தார்க்கு மிகமிக வெளிப்படை யாகவும் பேரறிஞர் அண்ணாவுக்குப் பெருங்கலைஞர் சூட்டி யிருக்கும் புகழ்மாலை என்றும் வாடா சொல்மாலை ஆகும். அது இது: ஊமைகன் வாழ உயிரைக் கொடுத்த உத்தமன் காலில் முகத்தைப் புதைத்தல் எக்தன் தொழிலாம் (5) கலைஞர் புகழ் அண்ணாவைக் காட்டும் ஐந்தாம் பகுதி நேரு கண்ட ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் கலைஞர் வழங்கிய தலைமைக் கவிதையே ஆகும். இதில் தொடக்கத்திலேயே பேரறிஞருக்குப் பெருங் கவிஞர் வணக்கம் கிடைக்கிறது.