பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வாவி, குளம், வாய்க்கால்கள் நீரெல்லாம் ஆவியாகி வறட்சிப் புயல் வக்துற்றுப் ஆகிரெல்லாம் சாவியாகிப் போன நிலை கண்டுவிட்டுத் தமிழ் அரசு தாவியோடித் திடுதிடென வெப்பத்துயர் தணித்தாலும் ஓவியமுகில் அனைத்தும் கருக்கொண்டு புவி மேவிட மழைக் குழந்தை ஈன்றதாலும் உணவுக் கட்டுப்பாடென்று முன்பு ஏவிய அரசாணை திரும்பப் பெற்று-இன்பக் காவியத் திருகாளாம் பொங்கல் இப்பகுதியில் உள்ள இலக்கிய நயங்களை எல்லாம் இப்போதைக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தாலும்-இருப்பது இயற்கை, சரியும்கூட- ஒதுக்கி ஒடுக்கி வைத்துவிட்டு அரசியல் பொருண்மைகளை மட்டும் எண்ணுவோம்: எண்ணி நம் முதல்வர் நா நலம் என்று இறும்பூதும் இறு. மாப்பும் கொள்வோம். கலைஞர் பெருந்தகை தம் அரசை-இல்லை-நம் அரசை தமிழ் அரசு' என்றே அல்லவா சொல்கிறார். இப்படி ஒரு முதல்வர்-சொல்ல மாட்டாரா என்றல்லவா செந்தமிழ்ச் சிலம்புச் செல்வர் - என் சிந்தை கவர்ந்த தலைவர்-அச்சுக்கோக்கும் தொழிலாளியாய் இருந்து அரசியல் அறிஞராய் ஆன அண்ணல்-கடந்த முப்பதாண்டுக் காலமாய் கனவு கண்டார்; சிறை சென்றும் கடமைகள் புரிந்தார். "தாவியோடி திடுதிடென வெப்பத்துயர் தணித்தாலும்’ கலைஞர் தன் அரசின்-தன்னரசின்(!?)-தொண்டின் விரைவை எல்லாம் இத்தொடரில் காட்டுகிறார் அன்றோ? அரசு அறம் செய்தால் அழகு மழை பொழியும் என்று நம் கலைஞர்-முதல்வர் நம்புகிறாரோ இல்லையோ அவர் சொற்கள் நம்மை நம்ப வைக்கின்றன. மேலும்