பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 1 கவிதைத் தொகுப்பில் முதல் கவிதை :விடுதலை வீரர்கள் பற்றியதாகும். இந்தக் கவிதையிலேயே கலைஞரின் கவியுள்ளத்தில் பாட்டாளியர் பரிவு குவிந்திருப் பதைக் காண முடிகிறது. உற்றார்-சுற்றம்: ஒருவர்.இருவர் உயர்வுடன் வாழ்தல் சுதந்திரம் ஆமோ? கற்றார்-கல்லார்-கழனியில் உழல்வோர் சிற்றாள்.கொல்லர்-சிறு தொழில் செய்வோர் மாதர் கல்லார் மாணவ மணிகள் தீதறு வாழ்வில் திளைத்தலே சுதந்திரம் (ப. 7} இந்த ஆறு வரிகளும் இந்திய விடுதலையின் உண்மைப் பொருளை-குறிக்கோளை-உலகுக்கு எடுத்து ஒதுவன அல்லவோ ? உற்றார்-சுற்றம்: ஒருவர்-இருவர் உயர்வுடன் வாழ்தல் சுதந்திரம் ஆமோ ? இந்த இரண்டு வரிகளும் விடுதலை வாழ்வைக் கெடுதலைத் தாழ்வாக்கும் வீணர்களின் போக்கை வெட்டிச் சாய்க்கப் பயன்படும் அல்லவா ? 2 இரண்டாவது கவிதை நீர்க் குடும்பம்". இந்தக் கவிதையில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீர்க் குடும்பம் பேரும் புகழும் சீரும் சிறப்பும் பெற்றுப் பெருகுகிறதுஆறாய், கிணறாய், குளமாய், கண்ணிராய், வியர்வையாய் என்று விளக்குகிறார் புவியாளும் கவிஞர். இக்கவிதையில் ஓரிடத்தில் அவர் சொல்லும் சொற்கள் நீர்மேல் எழுத்