பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 உழவனோர் வீரன்-என்றால் போர் இருக்கும் அவன் களத்தில் (வைக்கோல் போர்) உழவனோர் ஓவியன்வயல்கள் அனைத்தும் அவன் வரைந்த சித்திரம் உழவனோர் தெய்வம் உயிர்களைக் காப்பதால் (ப.62) பொன்னேர் பிடிக்கும் உழவனைத் தாமரையாய், மன்னனாய், வீரனாய், ஓவியனாய் ஏன் தெய்வமாய்க் காணும் கலைஞர் கண்களே கண்கள் அவருக்குத் துணை புரியும் கருத்தே கருத்து! கண்ணும் கருத்துமாய் நாடாளும் நம் முதல்வர் இவ்வாறு உழவனை ஒப்பில்லா ஒவியமாக்கிக் காட்டும் பெரும் பணியோடு அமைதி கொள்வாரோ : காந்தி அண்ணல்-காஞ்சி அண்ணன் வழியில் வன்முறை களால் வம்புகள் வாரா முன்னம் நன்னெறியில் செல்பவர்கள் தப்பாது தப்பி உய்ய வேண்டிய ஒரு பெரும் நெறியையும் உணர்த்துகிறார், கிலமுடையார் கெஞ்சத்தில் உழைப்போர்க்கு-உதவுகின்ற வளம் நிறைய இருத்தல் வேண்டும் (ப.69) ஆம். மண் இருந்தால் போதுமா? மனம்வேண்டாமா? மனமில்லார் மண்தானே! 4. நான்காவதாக நான்மறையினும் உயிருடைய-உயர்வு டைய நன் மறையாகிய தமிழ் மறையில் அறுவகையாரைக் காட்டும் கவியரங்கு ஒன்றுக்குத் தலைமை தாங்குகிறார் கலைஞர். அத்தலைமையுரைக் கவிதையில் பயிர் படைக்கும் உழவனுக்கும் உயிர் புடைக்கும் வீரனுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒர்கிறார் முதல்வர். விளைவு ? மறவன் பெருமைக்குப் போர்க்களமே வட்டம் உழவர் ஏருக்கு விளைகிலமே வட்டம் (ப.73)