பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வான் மறை தந்த வள்ளுவரே நம் அண்ணனாகப் பிறக்கத் தமிழ்த்தாய், கட்டளை இட்டதாய்க் கற்பனை செய்வர் கலைஞர். வள்ளுவரை அழைத்துத் தமிழ்த்தாய்க் குமுறிய குமுறல் என்ன தெரியுமோ? சென்றமையக் ல் இல்லை ஏழைக்கென்றாள் 黔 குடில் இ g (ப. 184) இவ்வாறு பெற்ற தாயின் பெருங் குமுறலைக்கண்டகேட்ட-வள்ளுவரின் வாய் வழங்கிய சொற்களையும் அதற்குத் தமிழ்த்தாய் கூறிய மறு மொழியையும் நம் மாண்புமிகு முதல்வரின் மணி மொழிகளிலேயே கேட்போம். அழுத கண்ணைத் துடைத்தவாது அமுத மொழி வள்ளுவனும் அம்மா நான் எங்கே பிறப்பதென்றான், தொழுத மகன் உச்சிமோந்து-ஆல் விழுதனைய கைகளாலே அனைத்துக் கொண்டு உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேல் என எண்ணி மனமகிழும் உழவன்போல், உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ, கற்கண்டே தேன்பாகே திருக்குறளே ! நீ காஞ்சியிலே பிறந்திடுக 1 என்றாள் (ப. 184) இக்கட்டுரை காட்டும் தமிழ்த்தாயின் பொருமவிலும் பூரிப்பிலும்-நைவிலும் நம்பிக்கையிலும்-ஏழையின் இன்னலையும் உழவனின் உள்ளத்தையும் அன்றோ நம் முதல்வர்-தமிழ்த்தாயின் தவப் புதல்வர் காண்கிறார்? காஞ்சி அண்ணன் காசினியில் பிறப்பதற்குக் கலைஞர் கூறும் ஒரே காரணமாக இருப்பது காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே என்பதன்றோ? கஞ்சி வார்க்கவே காஞ்சி! பாட்டாளிப் பரிவைக் காட்ட இதனினும் பளிச்