பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீஞ்சிதானே தருமம்' என்ற பழமொழியும் நம் நினைவிற்கு வந்து நம் எண்ணத்தினை மேலும் உறுதி செய்து கொள்வோம். ஆனால், அதிகமான் நெடு மான் அஞ்சி, அக் கனியினைத் தானே உண்ண எண்ணம் கொண்டிலன். அப்படி எண்ணம் கொண் டிருந்தால், அவன் எப்படி வள்ளல்களின் வரிசை யில் வைத்துச் சிறப்பிக்கப்படுவான் ? ஈந்தால் தானே இசைப்ட (புகழ் உண்டாக) வாழ இயலும்? ஆகவே, அதிகமான் நெடுமான் அஞ்சி, அக்கனி யினை ஒளவையார்க்கு ஈந்து அகம் மகிழ்ந்தான். அக்கனியினை அவ்வம்மையார் உண்டபின், அதன் இயல்பினை அறிவித்தனன். முன்னர் அறிவித்திருந் தால், அவ்வம்மையார் அதனை உண்ண மறுத்து, அவனையே உண்ணுமாறு வற்புறுத்தவும் கூடும். இக் காரணம் கொண்டே அவன் முன்னர் அதன் தன்மையினை அறிவிக்காமல், பின்னர் அறி வித்தனன். ஒளவையார் அதிகனுடைய தனக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெற்றியினைக் கண்டு பெருமகிழ்வு கொண்டனர். அப்போது அவனைப் புகழ்ந்து வாழ்த்தினர் அவ்வாழ்த்து, 'அழகிய மாலையினை அணிந்துள்ள அதிகமான் நெடுமான் அஞ்சியே! நீ எனக்கு மலைப் பிளவுகட்கு இடையே வளர்ந்த நெல்லி மரத்தின் கனியினை அதன் அருமை பெருமையினை நீ நன்கு உணர்ந்தும் அதனை எனக்கு உரைக்காமல், நான் பல்லாண்டு வாழ எனக்குக் கொடுத்தனையே! ஆகவே, வெள்ளிய பிறைச் சந்தி ரனைச் சடையில் அணிந்த நீலமணி போன்ற கழுத்தினை யுடைய ஒப்பற்ற சிவபெருமான் போல் வாழ்க' என்று வாழ்த்தினர். இந் நிகழ்ச்சி