பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

வைத்தனர். நம்பி ஆரூரர், சிவபெருமான் இத்துணை ாளிவந்து தம் கருத்தினை நிறைவேற்றி வைத் தழைக்குப் பெரிதும் மகிழ்ந்து அவனது திருவடி களில் இடையறாத இன்ப, அன்பு கொண்டு போற்றி வந்தனர்.

நம்பி ஆரூரர் நங்கை சங்கிலியாருடன் சின்னாள் தங்கி, இன்பமாக இனிது வாழ்ந்தனர். தம்பிரான் தோழர், யாத்திரை செய்வதில் பெரு விருப்புடை யவர் ஆதலானும், தமக்குப் பரவை நாச்சியாரை மணம் முடித்து வைத்த திருவாரூர்த் தியாகேசப் பெருமானை விட்டுப் பிரிந்து பல நாள் ஆனமையின், அவரைக் கண்டு தரிசிக்க வேண்டுமென்ற காரணத் தாலும் திரு ஒற்றியூரை விட்டுப் பிரிந்து இடையில் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு, இறுதியில் திருவா ரூரை அடைந்தனர்,

திருவாரூர்ப் பரவை நாச்சியார் தமது அன்புக்' குரிய ஆரூரர் தம்மைப் பிரிந்து போன நாள் தொட்டுப் பிரிவு ஆற்றாமையால் மிகவும் துன்புற்றி ருந்தார். இவ்வாறு காதலர் பிரிவால் கலக்கமுற்ற இவ்வம்மையார்க்குக் கலக்கத்தின் மேல் ஒரு கலக்க மாக ஒரு செய்தி இவருடைய காதில் வந்து வீழ்ந். தது. அதாவது தலயாத்திரை காரணமாக வெளி மலர்களுக்குச் சென்ற தம் காதலர், தொண்டை நாட்டை அடைந்து, திரு ஒற்றியூராம் திருத்தலத். கதைத் தரிசித்துப் பின் ஆண்டிருந்த சங்கிலி நாச்சி யார் 6என்பாளையும் மணந்து இன்புற்றனர் என்ப தாகும். இச்செய்தி பரவையார்க்கு வெந்த புண்ணில் (வேல் நுழைந்தது போல இருந்தது. நாம் ஒருத்தி