20
உடனே அர்ச்சகர் வடிவில் வந்த ஆருர்த் தியாகேசராம் தூதர், "மின்னல் போன்ற இடை யுடைய மாதே, நம்பி ஆரூரன், இங்கு வர நீ இசைய வேண்டும்" என்றனர்.
அம்மையார் அம்மொழிக்கு விடை பகரும் நிலை யில் “பெரியீர்! பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தில் திரும்பி வந்துவிடுவதாகக் கூறிச் சென்ற சுந்தரர், திரு ஒற்றியூரை அடைந்து சங்கிலியார் என்பவரை மணந்து கொண்ட பின், இங்கு அவருக்கு என்ன வேலை? நீங்கள் இந்த இரவில் இங்கு வந்து அவருக்காகப் பரிந்து பேசுவது வெகு நன்றாக இருக்கிறது!" என்று கூறினார்.
இந்தவாறு பரவையார் கூறக் கேட்ட தியாகேசர், "நங்கையே, நம்பி செய்த குற்றங்களை மனத்தில் கொள்ளற்க. கோபம் தணிக. உனது பிணக்கு நீக்க அன்றோ யாம் உன்னைக் கேட்கின் றோம். அப்படி இருக்க நீ மறுத்தல் அடாது" என்றனர்,
பரவையார் தாம் கொண்ட கோட்பாட்டை விட்டுக் கொடுத்தினர். மாதர்கள் எதை இழக் கினும் தம் வாழ்வைப் பங்கிட்டு வாழ எப்போதும் உளம் கொள்ளார். ஆதலின், அந்த முறைமைக் கேற்ப, "ஐயன்மீர்! நம் நம்பியாரூரர் சார்பில் நீர் இங்கு வந்து பேசுதல் உம் பெருமைக்கு ஏற்றதன்று. ஒற்றியூரில் உரிமை கொண்ட வீரரிங்கு வர யான் இசையேன். நீரும் வந்த வழியே செல்லலாம்” என்று கூறிவிட்டனர்.